தடம் தந்த தகைமை - வாழ்வு தரும் உணவு நானே
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
ஐயா, இவ்வுணவை எங்களுக்கு எப்போதும் தாரும் என கேட்கப்பட, இயேசுவோ, வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது. என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது என்றார் (யோவா 6:34-35)
உணவு இருவகைப்படும். 1) வயிற்றுக்கான உணவு 2) வாழ்வுக்கான உணவு. இந்த உலகமும், உலகியல் பார்வை கொண்ட சீடர்களும் வயிற்றுக்கான உணவையே தேடினர். அன்றன்றுள்ள வயிற்று உணவைப் பெற்றால் வாழ்ந்துவிடலாம் என்ற குறுநம்பிக்கையே இன்று எங்கும் எதார்த்தமாய் உள்ளது. வாழ்வின் உணவாம் இயேசுவை ஏற்று, அவரது வார்த்தையைக் கேட்டு, வழிநடந்தால் இறந்தும் இறவாது வாழலாம் என்பதை இன்னும் பலர் புரியவில்லை.
இயேசு என்னும் உணவை உண்ண நமக்குள் இருக்க வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அவரில் ஆழ்ந்த நம்பிக்கை. அவரது வார்த்தை எனும் உணவை நம்பி, இதயமேற்று வாழ்வாக்கத் துணிகையில் அவரே நம் துணிவும், துணையுமாய் ஒளிர்வார் என்பது உறுதி. நம் பிரச்சனை எதுவெனில், நாம் அவரிடம் செல்வதுமில்லை, அவரை உண்பதுமில்லை,
உண்டாலும் செயல்பாட்டில் அவரை இணைப்பதுமில்லை. செயலற்ற நம்பிக்கை பயனற்றது (யாக் 2:20) அன்றோ.
இறைவா! உம்மையே உணவாக உண்ணும் நான், என்னையும் பிறர்க்கான உணவாக்கும் உணர்வைத் தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்