தேடுதல்

உலகை அன்புகூர்ந்து காக்கும் கடவுள் உலகை அன்புகூர்ந்து காக்கும் கடவுள்  (©paracchini - stock.adobe.com)

தடம் தந்த தகைமை - அன்பு செலுத்துவோரிடமே அன்பு

திருப்பிக் கொடுக்க இயலாத ஏழை ஒருவருக்குக் காட்டும் பரிவும் பகிர்வுமே உயர்ந்தவை, உன்னதமானவை. அந்த உணர்வின்றி செய்யப்படும் செயல்கள் யாவும் வட்டியில்லாக் கடனுக்கு ஒப்பாகும்.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர்களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? வரிதண்டுவோரும் இவ்வாறு செய்வதில்லையா? (மத் 5:46) என கேட்கிறார் இயேசு.

அன்பு செலுத்துவோருக்கு அன்பு என்பதும் தவறு செய்தவருக்குத் தண்டனை என்பதும் ஒன்றே. உறவின் வியாபாரப் பார்வை இது. எதிர்பார்ப்புடன் பகிரப்படும் அன்பு தன்னலமிக்கது. அறிமுகமற்ற, தேவையில் உழல்கின்ற, திருப்பிக் கொடுக்க இயலாத ஒருவருக்குக் காட்டும் பரிவும் பகிர்வுமே உயர்ந்தவை, உன்னதமானவை. அந்த உணர்வின்றி செய்யப்படும் செயல்கள் யாவும் வட்டியில்லாக் கடனுக்கு ஒப்பாகும்.

பெரும்பாலும் நம் சமூகத்துள் நெருங்கிய உறவு, நீண்டநாள் நட்பு கொண்டிருப்பவர்களுள் நிகழும் அன்பளிப்புகள், எதை மையப்படுத்தியவை? எதைப் பெற்றோமோ அதைக் கொடுக்க வேண்டும், இல்லையென்றால் இன்னொரு நாள் குத்திப் பேசுவார்கள் என்ற அச்சக் கலாச்சாரத்தினால்தான். இது உறவு கொச்சைப்படுதலின் கலாச்சாரம். இவர்களையே இயேசு 'பாவிகள்' எனக் குறிப்பிடுகிறார். எதிர்பார்த்துக் கொடுப்பது தானம் ஆகவே ஆகாது.

இறைவா! எதிர்பார்த்து ஏதேனும் செய்தால் அது உம்மை ஏளனப்படுத்துவது. அந்த உணர்வை ஒருபோதும் எனக்குத் தர வேண்டாம்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 August 2024, 14:11