தடம் தந்த தகைமை – திரட்டப்பட்ட நிதியை ஒன்று சேர்த்த குருக்கள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
ஆலயப் பணிகளுக்காகக் கணக்கிடப்பட்ட பணத்தை, ஆண்டவரின் இல்லத்தில் பணியைக் கண்காணிக்குமாறு நியமிக்கப்பட்டவர்களிடம் கொடுத்தனர் குருக்கள். அவர்களும் ஆண்டவரின் இல்லத்தில் பணியாற்றிய தச்சர்களுக்கும், கொத்தர்களுக்கும், சிற்பிகளுக்கும், கல்வெட்டுவோர்க்கும் ஊதியம் அளித்தனர். மேலும், அதிலிருந்து ஆண்டவரின் இல்லத்தைப் பழுது பார்ப்பதற்குத் தேவையான மரங்கள், பொழிந்த கற்கள் ஆகியவற்றை வாங்குவதற்கும், அக்கோவிலைச் சீர்ப்படுத்துவதற்குத் தேவையான மற்றச் செலவுகளுக்கும் பயன்படுத்தினர்.
ஆயினும், ஆண்டவரின் இல்லத்திற்குத் தேவையான வெள்ளிக் கோப்பைகள், அணைப்பான்கள், கிண்ணங்கள் ஆகியவற்றைச் செய்வதற்கு ஆண்டவரின் இல்லத்தில் செலுத்தப்பட்ட வெள்ளிப் பணம் பயன்படுத்தப்படவில்லை. ஏனெனில், ஆண்டவரின் இல்லத்தைப் பழுது பார்த்த வேலையாள்களுக்காக மட்டுமே அது பயன்படுத்தப்பட்டது. வேலையாள்களுக்குக் கூலி கொடுக்குமாறு அப்பணத்தைப் பெற்றுக் கொண்டவர்களிடம் ஒரு கணக்கும் கேட்கவில்லை. அந்த அளவுக்கு அவர்கள் நாணயமாக நடந்துகொண்டார்கள். குற்ற நீக்கப்பலிக்கான பணமும் பாவம் போக்கும் பலிக்கான பணமும் ஆண்டவரின் இல்லத்திற்குக் கொண்டுவரப்படவில்லை. ஏனெனில், அவை குருக்களுக்கு உரியவை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்