தேடுதல்

காங்கோவின் புதிய அருளாளார்கள் காங்கோவின் புதிய அருளாளார்கள்  

ஆழமான நம்பிக்கையோடு வித்தியாசமாக வாழ்ந்தவர்கள் அருளாளர்கள்

மறைசாட்சிகளாக தங்கள் வாழ்வை அர்ப்பணித்த புதிய அருளாளர்களின் வாழ்க்கையானது உடல் சார்ந்த மரணம் வெற்றியடையவில்லை என்பதையும், கடவுள் தனது பணியாளர்களைக் கைவிடவில்லை என்பதையும் எடுத்துரைக்கின்றது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

மறைசாட்சிகள் வானத்திலிருந்து வருவது இல்லை அவர்கள் நம்மைப் போன்றவர்கள் என்றும், தங்களது வாழ்வின் இக்கட்டான சூழலில் கடவுளுக்கும் அவரது வார்த்தைக்கும் தங்களது ஆழமான நம்பிக்கையை வெளிப்படுத்தி வித்தியாசமாக வாழ்ந்தவர்கள் என்றும் கூறினார் கர்தினால்  Fridolin Ambongo Besungu

ஆகஸ்ட் 18 ஞாயிற்றுக்கிழமை காங்கோ குடியரசின் உவ்விரா பக்தியில் 4 மறைசாட்சிகள் அருளாளர்களாக உயர்த்தப்பட்ட திருப்பலி ஆற்றிய மறையுரையின்போது இவ்வாறு கூறினார் கின்சாசா உயர் மறைமாவட்ட பேராயர் கர்தினால் Fridolin Ambongo Besungu.

அருள்பணியாளார் ஆல்பர்ட் ஜோபர்ட், இத்தாலிய சவேரியன் மறைப்பணியாளார்களான லூய்ஜி கராரா, ஜியோவான்னி திதோனே, வித்தோரியோ ஃபாச்சின் ஆகியோர் அருளாளர்களாக உயர்த்தப்பட்ட நிலையில் மறைசாட்சியாக இருப்பது என்பது சான்றுள்ள வாழ்க்கை வாழ்வது சான்று பகர்வது என்றும், கிறிஸ்துவில் நம்பிக்கைக் கொண்ட கிறிஸ்தவன் உலகின் கடையெல்லை வரைக்கும் கிறிஸ்துவிற்கு சாட்சிகளாய் இருப்பார்கள் என்றும் கூறினார் கர்தினால் Fridolin.

அருளாளர்களின் இரத்தம் நமக்கு அமைதியின் பரிசைப் பெற்றுத் தரும் என்று உறுதியாக நம்புவதாக எடுத்துரைத்த கர்தினால் Besungu அவர்கள், கடவுள் போர்களை விரும்புவதில்லை. ஆயுத மோதல்கள் மனிதனை இழிவுபடுத்துகின்றன, நாம் கடவுளின் குழந்தை என்ற மாண்பை இழக்கின்றன என்றும் கூறினார்.

அலகை மற்றும் அதன் கூட்டாளிகளின் செயலான போர் மோதல் மற்றும் வன்முறைகள், துன்பத்தையும் மரணத்தையும் விதைக்கின்றன என்று எடுத்துரைத்த கர்தினால் Besungu அவர்கள், நமது வாழ்வின் இறுதி இலக்கு பற்றி முதலில் அக்கறை கொள்பவர் நமது கடவுள் என்றும் நம் ஒவ்வொருவரின் நிறைவான ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையை அவர் விரும்புகின்றார் என்றும் எடுத்துரைத்தார்.

மறைசாட்சிகளாக தங்கள் வாழ்வை அர்ப்பணித்த புதிய அருளாளர்களின் வாழ்க்கையானது உடல் சார்ந்த மரணம் வெற்றியடையவில்லை என்பதையும், கடவுள் தனது பணியாளர்களைக் கைவிடவில்லை என்பதையும் எடுத்துரைக்கின்றது என்று கூறிய கர்தினால் Fridolin அவர்கள் மத்தேயு நற்செய்தி எடுத்துரைக்கும் நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்; ஏனெனில், விண்ணரசு அவர்களுக்குரியது என்ற இறைவார்த்தைகளையும் மேற்கோள்காட்டினார்.

என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில், விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். என்ற இறைவார்த்தையை அருளாளர்களின் வாழ்வோடு தொடர்புபடுத்தி மறையுரையாற்றினார் கர்தினால் Fridolin.

கிறிஸ்துவின் உடலிலும் இரத்தத்திலும் பங்குகொள்வது என்பது அவருடைய துன்பத்திலும் மரணத்திலும் பங்குகொண்டு அவரில் நிலைத்து வாழ்வது என்றும், ஒவ்வொரு முறையும் நாம் நற்கருணையுடன் நாம் நம் உறவை வளர்க்கும்போது, இயேசுவின் வாழ்க்கை நமக்குள் வளர்கிறது என்றும் எடுத்துரைத்தார் கர்தினால்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 August 2024, 11:04