நேர்காணல் – உரோம் தூய மேரி மேஜர் பேராலயச் சிறப்பு
மெரினா ராஜ் - வத்திக்கான்
புல்லின் மேல் தூரிகையாய், பூக்களின் மேல் வெண்குடையாய், வானிலிருந்து விழும் முத்துக்களாய், மண்ணை நனைக்கும் வெண்பனி. பூப்போல் மலர்ந்து நீர் போல் கரையும் தன்மை கொண்ட பனியானது, மேலை நாடுகளில் சில குறிப்பிட்ட மாதங்களில் தான் பொழியும். பருவம் தவறி மழையும், பனியும் பொழிவது காலநிலை மாற்றம் என்று இப்போது கருதப்பட்டாலும், ஒருகாலத்தில் இப்படி வித்தியாசமான இயற்கை நிகழ்வுகள் நல் அனுபவங்களாகவும் இறைவிருப்பத்தை எடுத்துரைக்கும் தருணங்களாகவும் அமைந்தன.
"Tasnavis" என்பதற்கு போர்த்துகீசிய மொழியில் "பனிபெய்தல்" என்று பொருள். ஆகஸ்ட் மாதம் பனிபொழிந்து உரோம் எஸ்கனின் மலையில் ஆலயம் கட்ட அன்னை மரியா பணித்ததால் அவ்விடத்தில் எழுப்பப்பட்ட அன்னை மரியா ஆலயம் உலகில் உள்ள அன்னை மரியா ஆலயங்களுக்கு எல்லாம் தலைமை ஆலயமாக விளங்குகின்றது. Sancta Maria Tasnavis பனிமய அன்னை என்றும் அன்னை மரியா அழைக்கப்படுகின்றார். இத்தகைய சிறப்புமிக்க உரோம் தூய அன்னை மரியா பேராலயச் சிறப்பு பற்றி இன்றைய நம் நேர்காணலில் நம்முடன் பகிர்ந்து கொள்பவர் அருள்பணி அலெக்சாண்டர் மரியதாஸ்.
கோயம்புத்தூர் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்பணி அலெக்சாண்டர் மரியதாஸ் அவர்கள், தற்போது வத்திக்கானில் உள்ள திருவழிபாடு மற்றும் அருளடையாளங்கள் ஒழுங்குமுறைப் பேராயத்தில் பணியாற்றும் முதல் தமிழ் அருள்பணியாளர் என்ற பெருமைக்குரியவர். தந்தை அவர்களை மேரி மேஜர் என அழைக்கப்படும் தூய அன்னை மரியா பேராலயம் பற்றிய கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்