தேடுதல்

தூய மோனிக்கா மற்றும் தூய அகுஸ்தின் தூய மோனிக்கா மற்றும் தூய அகுஸ்தின்  (©Renáta Sedmáková - stock.adobe.com)

நேர்காணல் - கண்ணீரால் கடவுளை வென்ற தூய மோனிக்கா

திருஅவையில் சிறந்த புனிதரை உருவாக்கிய பெரும்பேறு பெற்றவர் தூய மோனிக்கா. தூய அகுஸ்தினாரின் தாயான தூய மோனிக்கா தனது மகன் மீது ஏராளமான அன்பு கொண்டு அவரது வாழ்க்கை மாற்றத்திற்காக அயராது செபித்தவர்.
நேர்காணல் - அருள்தந்தை. அருள் இருதயராஜ். கோவை மறைமாவட்டம்

மெரினா ராஜ் - வத்திக்கான்

இருள் நிறைந்த கருவறையில் நம்மைத் தாங்கி, ஒளி நிறைந்த உலகிற்கு நம்மைக் கொணர்ந்தவர் தாய். அன்பை நமக்கு அறிமுகம் செய்து வைத்து அளவின்றி அதனை அள்ளித்தருபவரும் தாய். நம்மைப்பற்றியும் நம் வாழ்வைப்பற்றியும் ஒவ்வொரு நாளும் கவலைப்படும் தாய் தன்னைக்குறித்து ஒருநாளும் கவலை கொள்ள மாட்டார். இவ்வாறாக தாயின் பண்பு நலன்களையும் தன்மையையும் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம் அவ்வகையில் திருஅவையில் சிறந்த புனிதரை உருவாக்கிய பெரும்பேறு பெற்றவர் தூய மோனிக்கா. தூய அகுஸ்தினாரின் தாயான தூய மோனிக்கா தனது மகன் மீது ஏராளமான அன்பு கொண்டு அவரது வாழ்க்கை மாற்றத்திற்காக அயராது செபித்தவர். ஆகஸ்ட் 27 அன்று திருஅவை தூய மோனிக்காவின் நினைவுநாளை சிறப்பிக்க இருப்பதை முன்னிட்டு அவர் பற்றியக் கருத்துக்களை இன்று நம்முடன் பகிர்ந்து கொள்பவர் அருள்தந்தை அருள் இருதயராஜ்.

கோயம்புத்தூர் மறைமாவட்டத்தைச் சார்ந்த அருள்தந்தை இருதயராஜ் அவர்கள், சென்னை திருஇருதய ஆண்டவர் குருத்துவக் கல்லூரியில் மெய்யியலையும், கோயம்புத்தூர் நல்லாயன் குருத்துவக் கல்லூரியில் இறையியலையும் கற்றவர். 2020ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் நாள் கோயம்புத்தூர் மறைமாவட்ட அருள்பணியாளராக குருத்துவ அருள்பொழிவு பெற்ற தந்தை அவர்கள், இரத்தினபுரி, கோவைப்புதூர் ஆகிய இடங்களில் உதவிப் பங்குதந்தையாகவும், இரண்டு ஆண்டுகள் ஆயர் செயலராகவும் பணியாற்றியவர். தந்தை அவர்களை தூய மோனிக்கா அவர்கள் பற்றியக் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 August 2024, 11:24