தேடுதல்

அரசின் அடக்குமுறைகளை அனுபவித்துவரும் நிகராகுவா திருஅவை அரசின் அடக்குமுறைகளை அனுபவித்துவரும் நிகராகுவா திருஅவை  (AFP or licensors)

நிகரகுவாவில் மீண்டும் இரு அருள்பணியாளர் கைது

இம்மாதம் 8ஆம் தேதி 7 அருள்பணியாளர்களை நாட்டைவிட்டு வெளியேற்றியுள்ளது நிகரகுவா அரசு. இந்த 7 அருள்பணியாளர்களும் உரோம் நகர் வந்தடைந்துள்ளனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

நிகரகுவா நாட்டில் கத்தோலிக்க திருஅவைக்கு எதிராக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக அந்நாட்டின் இரு அருள்பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Matagalpa மற்றும் Estelì மறைமாவட்டங்களின் இரு அருள்பணியாளர்கள் மற்றும் ஒரு மேய்ப்புப்பணி உடனுழைப்பாளரைக் கைது செய்துள்ள நிகரகுவா அரசு, ஏற்கனவே இம்மாதம் 8ஆம் தேதி 7 அருள்பணியாளர்களை நாட்டைவிட்டு வெளியேற்றியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த 7 அருள்பணியாளர்களும் உரோம் நகர் வந்தடைந்துள்ளனர்.

இம்மாதம் 10ஆம் தேதி Estelí மறைமாவட்டத்தின் பங்குதளப் பணியாளர் அருள்பணி Leonel Balmaceda அவர்களையும், Matagalpa மறைமாவட்ட தலைமையகத்தின் உடனுழைப்பாளர் Carmen Sáenz அவர்களையும் கைது செய்ததுடன், அதற்கு அடுத்த நாள் ஞாயிறன்று, Matagalpa பேராலய பங்குப்பணியாளர் அருள்பணி Denis Martínez அவர்களையும் கைது செய்துள்ளது.

இதற்கிடையே, நிகரகுவா அரசின் இத்தகைய செயல்பாடுகள் குறித்து குற்றம் சாட்டியுள்ள ஐ.நா.வின் மனித உரிமைகள் அவை, நிகரகுவா நாட்டில் மத உரிமைகள் மீறப்படுவது உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என அழைப்பு ஒன்றை விடுத்துள்ளது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 August 2024, 14:59