நைஜீரியாவின் நிலை மிகவும் கவலைக்குரியதாக இருக்கின்றது!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
நைஜீரியாவில் நிலவிவரும் அதிகப்படியான வறுமை, சிரமங்கள் மற்றும் ஊழல் பிரச்சினைகளில் அரசு தீவிரமாகக் கவனம் செலுத்தவில்லையென்றால், ஆப்பிரிக்க நாடு எதிர்காலத்தில் மேலும் போராட்டங்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்று எச்சரித்தனர் அந்நாட்டு ஆயர்கள்.
ஆகஸ்ட் 25, இஞ்ஞாயிறன்று, நைஜிரியாவின் Edo மாநிலத்தின் Auchi நகரில், தொடங்கிய இவ்வாண்டிற்கான இரண்டாவது கத்தோலிக்க ஆயர் பேரவையின்போது, அதன் தலைவரான Owerri இன் பேராயர் Lucius Ugorji அவர்கள் இத்தகையதொரு எச்சரிக்கையை விடுத்தார்.
ஆயர் பேரவையின் தொடக்கத்தில் நாட்டின் முன்னேற்றங்கள் குறித்து கருத்து தெரிவித்த பேராயர் உகோர்ஜி அவர்கள், சில கலவரக்காரர்களின் வன்முறையையும், ஆனால் அதேவேளையில், வன்முறைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் சில இளைஞர்கள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதையும் கண்டித்தார்.
நாடு வறுமை, சிரமம் மற்றும் ஊழலால் பாதிக்கப்பட்டிருக்கும் வரை, நம் நாட்டில் இளைஞர்களின் எதிர்காலம் இருண்டதாக இருக்கும் வரை, நாம் எதிர்ப்பை அனுபவித்துக்கொண்டே இருக்கிறோம் என்றும் குறிப்பிட்டார் பேராயர் உகோர்ஜி.
குறிப்பாக சில அரசு அதிகாரிகள், நோய்க்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக, ஒரு பலிகடாவைத் தேடும் தங்கள் பொறுப்பை மற்றவர்கள் மீது மாற்றுகிறார்கள் என்று குறிப்பிட்ட பேராயர் உகோர்ஜி அவர்கள், இவ்வன்முறைகள் குறித்து அரசு தரும் பதிலிறுப்புக்கு அவர் தனது விமர்சனங்களையும் வெளிப்படுத்தினார்.
சில துறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும் கூட, நாட்டின் தற்போதைய நிலைமை கவலைக்குரியதாக உள்ளது என்றும், பாதுகாப்பின்மை அதன் முக்கிய சவால்களில் ஒன்றாக உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் பேராயர் உகோர்ஜி.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்