அண்மை நைஜீரிய வன்முறையால் 74 கிறிஸ்தவர்கள் இறப்பு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
அண்மை வாரங்களில் நைஜீரிய வன்முறைகளால் 70க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 20 கிறிஸ்தவ மருத்துவ மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.
நைஜீரியாவின் Benue மாநிலத்தில் அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலால் அப்பகுதி மக்கள் தங்கள் கிராமங்களில் இருந்து வெளியேறி கத்தோலிக்க கோவில்களிலும் கல்விக்கூடங்களிலும் அடைக்கலம் தேடியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் Ayati கிராமத்தில் இஸ்லாமிய குழுக்கள் நடத்திய தாக்குதல்களில் இம்மாதத்தின் இரண்டாம் வாரத் துவக்கத்தில் குறைந்தபட்சம் 74 பேர் கொல்லப்பட்டனர்.
இம்மாதம் 15ஆம் தேதி Benue பகுதியின் 20 கிறிஸ்தவ மருத்துவ மாணவர்கள், கத்தோலிக்க திருஅவையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு மருத்துவ கருத்தரங்கிற்கு செல்லும் வழியில் கடத்தப்பட்டுள்ளனர்.
அண்மை ஆண்டுகளில் நைஜீரியாவில் கிறிஸ்தவர்கள் கொல்லப்படுவதும், கடத்தப்படுவதும் அதிகரித்து வருகின்றது.
2022ஆம் ஆண்டில் இந்நாட்டில் 5000க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர், 3000க்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டனர். 2023ஆம் ஆண்டில் 8000 கிறிஸ்தவர்கள் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்