தேடுதல்

பாப்புவா நியூ கினியா கிறிஸ்தவர்கள் பாப்புவா நியூ கினியா கிறிஸ்தவர்கள்  

திருத்தந்தையின் வருகைக்காகத் தயாராகும் பாப்புவா நியூ கினியா கிறிஸ்தவர்கள்!

உள்ளூர் கத்தோலிக்க சமூகம், உள்ளூர் கால்பந்து மைதானத்தில் இரவு இறைவேண்டல், பாடல்களை ஒழுங்கமைத்தல் மற்றும் கலாச்சார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நடனங்களை உள்ளடக்கிய விரிவான தயாரிப்புகளை செய்து வருகிறது : அருள்பணியாளர் Prado

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பாப்புவா நியூ கினியாவில் உள்ள கிறிஸ்தவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வருகைக்காக ஆவலுடன் தயாராகி வருவதாக ACN எனப்படும் தேவையில் இருக்கும் திருஅவைக்கு உதவும் அமைப்பிடம் கூறியுள்ளார், வார்த்தை மனுவுருவானார் என்ற துறவு சபையின் அருள்பணியாளர் Martín Prado

செப்டம்பர் 6-ஆம் தேதி பாப்புவா நியூ கினியாவிற்கு, குறிப்பாக, அதன் கடலோர நகரமான வனிமோவிற்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பயணமாக வருகிறார் என்ற எதிர்பார்ப்பு தொட்டுணரக்கூடிய ஒரு அனுபவமாக உள்ளது என்று மேலும் தெரிவித்துள்ளார் அருள்பணியாளர் Prado.

செய்தி மற்றும் சமூக ஊடகங்களுக்கான குறைந்த அணுகல் காரணமாக, அவர் பயணம் செய்கிறார் என்பது பலருக்குத் தெரியாது என்று குறிப்பிட்டுள்ள அருள்பணியாளர் Prado அவர்கள், நாங்கள் அனைவரும் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம் என்றும், எங்களால் முடிந்தவரை திருத்தந்தையை வரவேற்க கடினமாக உழைக்கிறோம் என்றும் உரைத்துள்ளார்.

உள்ளூர் கத்தோலிக்க சமூகம், உள்ளூர் கால்பந்து மைதானத்தில் இரவு இறைவேண்டல், பாடல்களை ஒழுங்கமைத்தல் மற்றும் கலாச்சார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நடனங்களை உள்ளடக்கிய விரிவான தயாரிப்புகளை செய்து வருகிறது என்றும், இதில் அனைவரும் ஆர்வமாகப் பங்கேற்று வருகின்றனர் என்றும் கூறியுள்ளார் அருள்பணியாளர் Prado

இங்குள்ள கிறிஸ்தவர்களின் நம்பிக்கை மிகவும் உயிரோட்டமானது மற்றும் மிகவும் எளிமையானது என்று குறிப்பிட்டுள்ள அவர், மக்களிடம் காணப்படும் நம்பிக்கை நடைமுறைகளின் தனித்துவமான இணக்கத்தையும் தனது நேர்காணலில் முன்னிலைப்படுத்தியுள்ளார்.

பாப்புவா நியூ கினியாவிற்கான திருத்தந்தையின் பயணத்திட்டம்

செப்டம்பர் 6-ஆம் தேதி காலை ஜகார்த்தாவிலிருந்து விடைபெறும் திருத்தந்தை, மாலை உள்ளூர் நேரம் 6.50 மணிக்கு பாப்புவா நியூ கினியின் Port Moresby விமான நிலையம் வந்தடைவார்.

செப்டம்பர் ஏழாம் தேதி அரசு அதிகாரிகளையும், தெரு வாழ் சிறுவர் மேய்ப்புப்பணி மையத்தையும், ஆயர்கள் மற்றும் தலதிருஅவை அதிகாரிகளையும் சந்திப்பார்.

செப்டம்பர் 8ஆம் தேதி, பிரதமரைச் சந்திப்பது, பொதுமக்களுக்கு திருப்பலி நிறைவேற்றுவது ஆகிய நிகழ்ச்சிகளுக்குப்பின் Vanimo மறைமாவட்டத்திற்கு விமானத்தில் சென்று அங்குள்ள விசுவாசிகளையும், மறைப்பணியாளர்களையும் சந்தித்தபின் Port Moresby  திரும்புவார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 August 2024, 12:49