தேடுதல்

இறைவேண்டல் செய்யும் கிறிஸ்தவர்கள் இறைவேண்டல் செய்யும் கிறிஸ்தவர்கள்   (AFP or licensors)

நிக்கராகுவாவில் மேலும் ஒரு அருள்பணியாளர் கைது!

கடந்த 2023 -ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிக்கராகுவா அரசு, உறவுமுறைகளில் எவ்வித பாதிப்பும் ஏற்பாடாவண்ணம் அந்தந்த தூதரக அலுவலகங்களை மூடுமாறு திருப்பீடத்திடம் கேட்டுக் கொண்டது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஆகஸ்ட் 5, இத்திங்களன்று, நிக்கராகுவாவிலுள்ள மதகல்பாவின் குவானுகா மாவட்டத்தில் உள்ள புனித லூயிஸ் கொன்சாகா தத்துவயியல் அருள்பணியாளர் உயர் பயிற்சியகத்தின் அதிபரும், தூய மரியா தெ குவாதலூப் பங்குத்தளத்தின் பங்குத்தந்தையுமான Jarvin Tórrez அவர்கள், அந்நாட்டு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தத் தகவலை அப்பங்குத்தளத்தின் இறைமக்கள் ஊடங்களுக்குத் தெரிவித்ததாக உரைக்கும் அச்செய்திக்குறிப்பு, நாட்டில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகள், "La prensa" என்ற தேசிய நாளிதழை மேற்கோள் காட்டி, அருள்பணியாளர் காவலில் வைக்கப்பட்டதைக் கண்டித்துள்ளனர் என்றும், Lesbia Rayo Balmaceda என்னும் ஒரு பொதுநிலை ஒத்துழைப்பாளரும் அவருடன் சேர்த்து கைது செய்ப்பட்டதாகவும் உரைக்கிறது.

நிக்கராகுவாவில் ஒரு வார காலத்தில் 13 அருள்பணியாளர்கள் கைதுசெய்யப்பட்டு ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் மதகல்பா மறைமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், அதன் ஆயரான Rolando Álvarez அவர்கள், இவ்வாண்டு ஜனவரி 14-ஆம் தேதியன்று வத்திகானுக்கு நாடு கடத்தப்பட்டார்.

கடந்த 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிக்கராகுவா அரசு, உறவுமுறைகளில் எவ்வித பாதிப்பும் ஏற்பாடாவண்ணம் அந்தந்த தூதரக அலுவலகங்களை மூடுமாறு  திருப்பீடத்திடம் கேட்டுக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 August 2024, 14:07