தேடுதல்

மொர்தக்காய் மொர்தக்காய் 

தடம் தந்த தகைமை : மன்னரின் உயிரை மொர்தக்காய் காத்தல்!

அகஸ்வேரைத் தாக்க இருவர் திட்டமிடுவதைக் குறித்து மொர்தக்காய்க் எஸ்தரிடம் கூற, அவர் மன்னரிடம் அறிவித்தார். உடனே இத்திட்டம் குறித்து புலனாய்வு செய்யப்பட்டு குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டார்கள்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கன்னிப் பெண்கள் இரண்டாம் முறையாய் ஒன்று கூட்டப்பட்டபொழுது, மொர்தக்காய் அரசவாயிலில் பணி புரிந்து கொண்டிருந்தார். மொர்தக்காய் கட்டளையிட்டவாறு, எஸ்தர் தம் வழிமரபையோ இனத்தையோ வெளிப்படுத்தாதிருந்தார். அவரால் வளர்க்கப்பட்டபோது செய்தது போலவே, அப்பொழுதும், எஸ்தர் மொர்தக்காயின் கட்டளைக்கு இணங்கி நடந்தார்.

மொர்தக்காய் அரச வாயிலருகில் பணிபுரிந்த நாள்களில், பிகதான், தெரேசு, என்ற இருவர் சினமுற்று மன்னர் அகஸ்வேரைத் தாக்க வகை தேடினர். இக்காரியம் மொர்தக்காய்க்குத் தெரிந்தது. இதனை அவர் அரசி எஸ்தரிடம் கூற, அவர் மொர்தக்காயின் பெயரால் அதனை மன்னரிடம் அறிவித்தார். உடனே அக்காரியம் புலனாய்வு செய்யப்பட, உண்மை வெளிப்பட்டது. அவர்கள் இருவரும் தூக்கிலிடப்பட்டனர். இந்நிகழ்ச்சி மன்னர் முன்னிலையில் குறிப்பேட்டில் எழுதிவைக்கப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 September 2024, 08:19