தடம் தந்த தகைமை - உள்ளவருக்குக் கொடுக்கப்படும்
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; அவர் நிறைவாகப் பெறுவார். மாறாக இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும் (மத் 13:12) என்றார் இயேசு.
மிக எளிதாகத் தவறான புரிதலைக் கொடுக்கும் சொல்லாடல் இது. இந்த உலகம் படிப்பு, பதவி, செல்வம், செல்வாக்கு எனக்கொண்டு செருக்கோடு வாழ்வோர்க்கு உயர் மதிப்பும் பணிவு, பாசம், உண்மை, நேர்மை கொண்டு எளிமையோடு வாழ்வோர்க்குக் குறைந்த மதிப்பும் வழங்குகிறது. இந்த அணுகுமுறை அகற்றப்பட வேண்டும் என்பதே இயேசுவின் பார்வை. மதிப்பீடுகளோடு வாழ்பவர்க்கு உயர் மதிப்பு வழங்குவது, மதிப்புக்கு நாம் வழங்கும் மதிப்பாகும். இங்கே ‘உள்ளவர்’ எனச் சொல்லப்படுபவர் செல்வமும், சுகபோகமும் உள்ளவர் அல்ல, நன்மதிப்பீடுகளும் நலமான பார்வைகளும் கொண்டு நீதி நேய உள்ளத்தோடு வாழ்பவரையே குறிக்கும். அவர்களே மானுட மதிப்பிற்கும் இறைக்கருணைக்கும் உரியவர். அவர்களுக்குள் இறையருள் நிரம்பி வழியும். அதேவேளையில் முயற்சியும், உழைப்பும், நற்குணமுமின்றி, பகிர்வைத் துறந்து ‘இல்லை’ என்று சொல்லியே வாழ்வோர் இருப்பதையும் இழப்பர்.
இறைவா! நீர் என்னுள் வாழ்வதால் நான் பெருஞ்செல்வர். உம்மிடமிருந்து என்னை பிரிய விடாதேயும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்