தடம் தந்த தகைமை – அரசர்களான யோவாசு மற்றும் அமட்சியா சந்திப்பு
மெரினா ராஜ் – வத்திக்கான்
அமட்சியா இஸ்ரயேலின் அரசனும் ஏகூவின் மகன் யோவகாசின் புதல்வனுமாகிய யோவாசிடம் தூதனுப்பி, “வாரும்! போர்க்களத்தில் நேருக்கு நேர் சந்திப்போம்” என்று சொல்லச் சொன்னான். அதற்கு இஸ்ரயேலின் அரசன் யோவாசு யூதாவின் அரசன் அமட்சியாவிடம் ஆளனுப்பி, “லெபனோனின் நெருஞ்சிச் செடி லெபனோனின் கேதுரு மரத்திடம் தூதனுப்பி, ‘என் மகனுக்கு உன் மகளை மணமுடித்துக் கொடு’ என்றதாம்;
ஆனால், லெபனோனின் விலங்கு ஒன்று அவ்வழியே போகையில் நெருஞ்சிச் செடியை மிதித்துப் போட்டதாம்! நீ ஏதோமியரை முறியடித்தது உண்மைதான். எனவே, நீ நெஞ்சிலே செருக்குற்றாய்! பெருமைப்பட்டுக் கொள்! ஆனால், உன் வீட்டினுள்ளே தங்கியிரு! நீயும் உன்னோடு யூதாவும் வீழ்ச்சியுறவா தீமையை நீ நாடுகிறாய்?” என்று சொன்னான். அதற்கு அமட்சியா செவி கொடுக்கவில்லை. எனவே, இஸ்ரயேலின் அரசன் யோவாசு போருக்குப் புறப்பட்டு வந்தான். அவனும் யூதா அரசன் அமட்சியாவும் யூதாவைச் சார்ந்த பெத்செமேசில் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்