தேடுதல்

நற்செய்தியாளரான தூய மத்தேயு நற்செய்தியாளரான தூய மத்தேயு  

நேர்காணல் - மத்தேயு நற்செய்தியின் சிறப்பு அம்சங்கள்

நற்செய்தி நூல்களுள் முதன்மையானதாகத் திகழ்வது திருத்தூதர் மத்தேயு எழுதிய மத்தேயு நற்செய்தி. செப்டம்பர் 21 சனிக்கிழமையன்று திருத்தூதரும் நற்செய்தியாளருமான தூய மத்தேயுவின் விழாவினைத் திருஅவை சிறப்பித்து மகிழ்கின்றது.
அருள்தந்தை கபிரியேல் அந்தோணிராஜ் - சிவகங்கை மறைமாவட்டம்

மெரினா ராஜ் – வத்திக்கான்

நல்ல செய்தி மனதிற்கு நலமளிக்கும் செய்தியே நற்செய்தி. நமதாண்டவர் இயேசுவின் வாழ்க்கையையும் வரலாற்றையும் அவர் நமது நல்வாழ்விற்கென நமக்களித்த போதனைகளையும் உள்ளடக்கியன நற்செய்தி நூல்கள். இந்த நற்செய்தி நூல்கள் பலவாக இருந்தாலும் அவற்றுள் 4 மட்டுமே கத்தோலிக்க திருஅவையால் ஏற்றுக் கொள்ளப்பட்டவைகளாக இருக்கின்றன. நற்செய்தி நூல்களுள் முதன்மையானதாகத் திகழ்வது திருத்தூதர் மத்தேயு எழுதிய நூலான மத்தேயு நற்செய்தி. செப்டம்பர் 21 சனிக்கிழமையன்று திருத்தூதர் மத்தேயுவின் விழாவினைத் திருஅவை சிறப்பிக்கும் வேளையில் அவர் எழுதிய நற்செய்தியின் சிறப்பம்சங்கள் குறித்து இன்றைய நம் நேர்காணலில் நாம் காண இருக்கின்றோம். திருத்தூதரும் நற்செய்தியாளருமான தூய மத்தேயுவின் நற்செய்தி குறித்த கருத்துக்களை இன்று நம்முடன் பகிர்ந்து கொள்பவர் அருள்தந்தை கபிரியேல் அந்தோணிராஜ்.

சிவகங்கை மறைமாவட்டத்தைச் சார்ந்த அருள்தந்தை கபிரியேல் அந்தோணிராஜ் அவர்கள், கருமாத்த்தூர் தூய அருளானந்தர் கல்லூரியில் மெய்யியலையும், பெங்களூர் தூய பேதுரு பாப்பிறை குருத்துவக் கல்லூரியில் இறையியலையும் பயின்றவர். உதவிப்பங்குத்தந்தையாகவும் பங்குத்தந்தையாகவும் பல இடங்களில் சிறப்புடன் பணியாற்றியுள்ள அருள்தந்தந்தை கபிரியேல் அவர்கள், விவிலியத்தில் முதுகலைப் படிப்பினை முடித்து, தற்போது அது தொடர்பான ஆராய்ச்சி முறைக் கல்வியினை மேற்கொண்டு வருகின்றார். குருத்துவ வாழ்வில் 14 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள அருள்தந்தை கபிரியேல் அவர்கள் விவிலிய இறைவார்த்தை ஆராய்ச்சியில் மிகுந்த ஆர்வமும், எளிமையாக அதை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்ற வேட்கையும் கொண்டவர் தந்தை அவர்களை மத்தேயு நற்செய்தியாளர் பற்றியும் அவரது நற்செய்தியின் சிறப்பம்சங்கள் பற்றியும் எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 September 2024, 08:37