தேடுதல்

அரசன் அசரியா அரசன் அசரியா 

தடம் தந்த தகைமை - யூதா அரசனான அமட்சியாவின் மகன் அசரியா

அமட்சியா மூதாதையருடன் எருசலேமில் தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டான். பின்னர், யூதா மக்கள் எல்லாரும் பதினாறு வயதினனாய் இருந்த அசரியாவைத் தேர்ந்தெடுத்து அவனை அவன் தந்தை அமட்சியாவுக்குப் பதிலாக அரசனாக்கினர்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

இஸ்ரயேல் அரசன் யோவகாசின் மகன் யோவாசு இறந்தபின், யூதா அரசனான யோவாசின் மகன் அமட்சியா பதினைந்து ஆண்டுகள் உயிர் வாழ்ந்தான். அமட்சியாவின் பிற செயல்கள் ‘யூதா அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன. எருசலேமில் சிலர் அமட்சியாவுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர். எனவே, அவன் இலாக்கிசுக்குத் தப்பி ஓடினான். ஆனால், அவர்கள் இலாக்கிசுக்கு ஆளனுப்பி அவனை அங்குக் கொலை செய்து, அவனது சடலத்தைக் குதிரைகளின் மேல் ஏற்றிக்கொண்டு வந்தனர்.

அவன் மூதாதையருடன் எருசலேமில் தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டான். பின்னர், யூதா மக்கள் எல்லாரும் பதினாறு வயதினனாய் இருந்த அசரியாவைத் தேர்ந்தெடுத்து அவனை அவன் தந்தை அமட்சியாவுக்குப் பதிலாக அரசனாக்கினர். அமட்சியா தன் மூதாதையரோடு துயில் கொண்டபின், அவன் ஏலத்து நகரை மீண்டும் உருவாக்கி யூதாவுடன் இணைத்துக் கொண்டான்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 October 2024, 13:42