தேடுதல்

யூதர்களுக்கு எதிராக ஆமான் யூதர்களுக்கு எதிராக ஆமான் 

தடம் தந்த தகைமை : ஆமானின் சதித்திட்டத்திற்கு மன்னரின் அங்கீகாரம்

மன்னர் ஆமானிடம், “வெள்ளியும், யூத மக்களும் உன் கையில்; உனக்கு நலமெனப்பட்டதை அவர்களுக்குச் செய்’’ என்றார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

அகஸ்வேரது ஆட்சியில் பன்னிரண்டாம் ஆண்டில், முதல் மாதமாகிய நீசானில், யூதரைக் கொன்று ஒழிப்பதற்கான மாதத்தையும், நாளையும் அறியுமாறு, ஆமானின் முன்னிலையில் ‘பூர்’ என்ற சீட்டுப் போடப்பட்டது. அதார் என்னும் பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாம் நாளுக்குச் சீட்டு விழுந்தது.

ஆமான் அகஸ்வேரிடம், ‘‘உம் ஆட்சிக்குட்பட்ட அனைத்து மாநிலங்களின் மக்களிடையே மாறுபட்ட மக்கள் சிதறுண்டு பரவியுள்ளனர். அவர்தம் நியமங்கள் மற்றெல்லா மக்களின் நியமங்களிலும் மாறுபட்டவை. அவர்கள் மன்னரின் நியமங்களின் படி செய்வதில்லை. அவர்களை அவ்வாறே விட்டுவைப்பதில் மன்னருக்கு நன்மை ஏதுமில்லை. இது மன்னருக்கு நலமெனப்பட்டால் அவர்களை அழிக்கும்படி கட்டளையிட வேண்டும். இவ்வேலையைச் செய்வோருக்குக் கொடுக்குமாறு நானூறு டன் வெள்ளியை நிறுத்து மன்னரின் கருவூலத்தில் சேர்ப்பேன்'’ என்று கூறினான்.

அப்போது, மன்னர் தம் கணையாழியைக் கழற்றி, யூதரின் பகைவனாம் ஆகாகியனான அம்மாதத்தின் மகன் ஆமானிடம் கொடுத்தார். மன்னர் ஆமானிடம், “வெள்ளியும், யூத மக்களும் உன் கையில்; உனக்கு நலமெனப்பட்டதை அவர்களுக்குச் செய்’’ என்றார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 October 2024, 15:53