தேடுதல்

தன் தாய் எக்கொலியாவுடன் அரசன் அசரியா தன் தாய் எக்கொலியாவுடன் அரசன் அசரியா 

தடம் தந்த தகைமை – யூதா நாட்டின் அரசனான அசரியா

அரசன் அசரியா எருசலேமில் ஐம்பத்திரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். எருசலேம் நகரைச் சார்ந்த எக்கொலியா என்பவளே அவன் தாய்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

இஸ்ரயேலின் அரசன் எரொபவாம் ஆட்சியேற்ற இருபத்தேழாம் ஆண்டில், யூதா அரசனும் அமட்சியாவின் மகனுமான அசரியா அரசனானான். அவன் ஆட்சியேற்ற பொழுது அவனக்கு வயது பதினாறு. அவன் எருசலேமில் ஐம்பத்திரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். எருசலேம் நகரைச் சார்ந்த எக்கொலியா என்பவளே அவன் தாய். அவன் தன் தந்தை அமட்சியா செய்ததுபோலவே, எல்லாவற்றிலும் ஆண்டவர் திருமுன் நேர்மையாக நடந்தான். ஆயினும், அவன் தொழுகை மேடுகளை அழிக்கவில்லை. மக்கள் இன்னும் அம்மேடுகளில் பலியிட்டும் தூபம் காட்டியும் வந்தனர். எனவே, ஆண்டவர் அவ்வரசனைத் தண்டித்து அவன் இறக்குமட்டும் அவனைத் தொழுநோயாளன் ஆக்கினார். அவனும் ஒரு ஒதுக்குப் புறமான வீட்டில் வாழ்ந்து வந்தான். எனவே, அரசனின் மகன் யோத்தாம் அரண்மனைப் பொறுப்பேற்று நாட்டு மக்களை ஆண்டு வந்தான்.

அசரியாவின் பிற செயல்களும், அவன் செய்தவை யாவும் ‘யூதாவின் அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன. அசரியா தன் மூதாதையரோடு துயில்கொண்டு தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப் பின் அவனுடைய மகன் யோத்தாம் அரசன் ஆனான்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 October 2024, 13:57