தடம் தந்த தகைமை – அரசன் எரோபவாமின் வல்ல செயல்கள்
மெரினா ராஜ் – வத்திக்கான்
இஸ்ரயேலர் மிகக் கடுமையாகத் துன்புறுவதையும் அவர்களுக்குத் துணை செய்ய, அடிமையோ, குடிமகனோ, எவனும் இல்லை என்பதையும் ஆண்டவர் கண்டார். ஆனால் ஆண்டவர், இஸ்ரயேலின் பெயரை வானத்தின் கீழிருந்து அழித்து விடுவதாகக் கூறியிருக்கவில்லை. எனவே, அவர் அவர்களை யோவாசின் மகன் எரொபவாமின் மூலம் விடுவித்தார். எரொபவாமின் பிறசெயல்கள், அவனுடைய அனைத்துச் செயல்பாடுகள், போரில் அவன் காட்டிய பேராற்றல், யூதா நாட்டுக்கு உரிமையாயிருந்த தமஸ்கு, ஆமாத்து ஆகிய நகர்களை இஸ்ரயேல் நாட்டுடன் இணைத்துக் கொண்ட முறை ஆகியன பற்றி ‘இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன. எரொபவாம் தன் மூதாதையரான இஸ்ரயேல் அரசர்களுடன் துயில் கொண்டான். அவனுக்குப் பின் அவன் மகன் செக்கரியா அரசன் ஆனான்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்