தேடுதல்

தூய பிரான்சிஸ் அசிசி தூய பிரான்சிஸ் அசிசி 

நேர்காணல் – ஐந்து திருக்காய வரம் பெற்ற தூய பிரான்சிஸ் அசிசி

ஐந்து காய வரம் பெற்றவரும் இயற்கையின் மீதுஅளவற்ற அன்பு கொண்டவருமான தூய பிரான்சிஸ் அசிசியின் திருவிழாவினை அக்டோபர் 4 திருஅவை சிறப்பிக்கின்றது.
ஐந்து திருக்காய வரம் பெற்ற தூய பிரான்சிஸ் அசிசி - அருள்பணி ஆரோக்கியம் ஜான்

மெரினா ராஜ் – வத்திக்கான்

செல்வம் படைந்த வணிகக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும், ஏழைகளின் தோழனாக வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டு அனைத்தையும் துறந்து, துறவு வாழ்வு வாழ்ந்தவர் அசிசி நகர் தூய பிரான்சிஸ். 1204 ஆம் ஆண்டில் இறைஇயேசுவால் ஆட்கொள்ளப்பட்டு உலக வாழ்வினைத் துறந்து, தனக்குச் சொந்தமான தன் தந்தையின் செல்வம் அனைத்தையும் வேண்டாம் என உதறித்தள்ளிவிட்டு, ஏழைகளின் தோழனாய், எளிமையான வாழ்வு வாழ தன்னை அர்ப்பணித்தவர். இயேசுவை அதிகமதிகமாக அன்பு செய்து, அவரது பாடுகளைத் தானும் அனுபவிக்கவேண்டும் என்ற அதீதமான விருப்பத்தால், இயேசுவிற்கு இருந்த பாடுகள் அனைத்தையும் தனது உடம்பில் ஏற்றவர். ஐந்து திருக்காய வரம் பெற்றவரும், இயற்கையின் மீதுஅளவற்ற அன்பு கொண்டவருமான தூய பிரான்சிஸ் அசிசியின் திருவிழாவினை அக்டோபர் 4 திருஅவை சிறப்பிக்கும் வேளையில், அவரைப் பற்றியும், அவரது ஐந்து திருக்காய வரத்தின் 800 ஆவது ஆண்டு குறித்தும் நம்மிடையே பகிர்ந்து கொள்ள இருக்கின்றார் அருள்பணி ஆரோக்கியம் ஜான்.

புனித பிரான்சிஸ் அசிசியார் சபையைச் சார்ந்தவரான அருள்பணி ஆரோக்கியம் ஜான் அவர்கள், சபையின் வடகிழக்கு இந்தியாவில் உள்ள புனித பிரான்சிஸ் அசிசி மறைப்பணி அறக்கட்டளையின் உறுப்பினர் ஆவார். இது இந்தியாவில் உள்ள திருத்தூதர் தூய தோமையார் மறைமாநிலத்தில் உள்ளது. உரோமில் உள்ள அந்தோணியம் திருப்பீடப்பல்கலைக் கழகத்தில் ஆன்மிக இறையியலில் பிரான்சிஸ்கன் ஆன்மிகத்தில் பட்டம் பெற்றவர். உரோமில் உள்ள மரியானோம் பல்கலைக்கழகத்தில் மரியியல் இறையியலில் முனைவர் பட்டம் பெற்றவர். 2022 ஆம் ஆண்டு முதல், பாமி (PAMI) எனப்படும் மரியியல் பன்னாட்டு திருப்பீட அகாடமியின் உறுப்பினராகவும், தற்போது அந்தோணியாம் திருப்பீடப் பல்கலைக்கழகத்தில் மரியியல் இறையியல் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார். பிரான்சிஸ்கன் பன்னாட்டு இதழ்களின் ஆசிரியராக சிறப்புடன் பணியாற்றி வரும் அருள்தந்தை ஆரோக்கியம் ஜான் அவர்களை தூய பிரான்சிஸ் அசிசி பற்றியும், ஐந்து திருக்காய வரம் பெற்றதன் 800 ஆவது ஆண்டு குறித்தும் எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 October 2024, 10:58