தேடுதல்

வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில்  (ANSA)

திருஅவையில் யூபிலி ஆண்டு 20025 – யூபிலி கொண்டாட்டங்கள் - பகுதி 1

2025ஆம் ஆண்டிற்கான யூபிலிக் கொண்டாட்டங்கள் ஒவ்வொரு நிலையினராலும் ஒவ்வொரு நாளில் சிறப்பிக்கப்பட இருக்கின்றன.

மெரினா ராஜ் - வத்திக்கான்

2024ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் நாள் வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் உள்ள புனிதக் கதவு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் திறக்கப்பட்டதுடன் ஆரம்பமாக இருக்கும், 2025ஆம் ஆண்டிற்கான யூபிலிக் கொண்டாட்டங்கள் ஒவ்வொரு நிலையினராலும் ஒவ்வொரு நாளில் சிறப்பிக்கப்பட இருக்கின்றன. அதுகுறித்த ஒரு நிகழ்ச்சிநிரலின் முதல் பகுதியை இன்றைய நம் நிகழ்வில் காணலாம்.

2025ஆம் ஆண்டு ஜனவரி 24 முதல் 26 வரை உலக சமூக தொடர்புகளுக்கான யூபிலியாக வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் சிறப்பிக்கப்பட இருக்கின்றது.

பிப்ரவரி 8 மற்றும் 9 ஆகிய நாள்களில் காவல் படையினர், மற்றும் பாதுகாப்புப் படையினருக்கான யூபிலி நாளாகவும், பிப்ரவரி மாதம் 15 முதல் 18 வரை கலைஞர்களுக்கான யூபிலி நாளாகவும் கொண்டாடப்பட உள்ளது.

பிப்ரவரி 21 உதல் 23 வரை திருத்தொண்டர்களுக்கான யூபிலி நாளாகவும், மார்ச் 8 ம் உதல் 9 தன்னார்வலர்களுக்கான யூபிலி நாளாகவும்,  மார்ச் 28 24 மணி நேர திரு நற்கருணை ஆராதனை நடைபெறும் நாளாகவும் சிறப்பிக்கப்பட இருக்கின்றது.  மார்ச் 28  முதல் 30 இறை இரக்கத்தின் மறைப்பணியாளர்களுக்காகவும், ஏப்ரல் 5 முதல் 6 நோயாளிகளுக்காகவும், ஏப்ரல் 25 முதல் 27 பதின்பருவத்தினருக்காகவும், 28 முதல் 29 மாற்றுத்திறனாளிகளுக்காகவும் கொண்டாடப்பட இருக்கின்றது.

 மே மாதம் 1 முதல் 4 வரை தொழிலாளர்கள், 4முதல் 5 வரை தொழில் முனைவோர், 10 முதல் 11 இசைக்கருவிகள் இசைப்பவர்கள், 12 முதல் 14 கிழக்கத்திய திருஅவையினர், 16 முதல் 18 கொன்ப்ரத்தர்னித்தா எனப்படும் உடன்பிறந்த உணர்வு சபையார்,  மே 30 முதல் ஜூன் 1  வரை குடும்பம் குழந்தைகள், தாத்தா பாட்டிகள், முதியோர் நாளாகவும்  கொண்டாடப்பட இருக்கின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 October 2024, 13:54