தேடுதல்

யூபிலி ஆண்டு 2025 யூபிலி ஆண்டு 2025 

திருஅவையில் யூபிலி ஆண்டு 2025 - யூபிலி கொண்டாட்டங்கள் - பகுதி 2

செப்டம்பர் 26 முதல் 28 மறைக்கல்வி ஆசிரியர்களுக்காகவும், அக்டோபர் 4 முதல் 5 உலக மறைப்பணியாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்காகவும், 8 முதல் 9 அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்காகவும், 11 முதல் 12 மரியன்னை ஆன்மிகத்தைக் கடைபிடிப்பவர்களுக்காகவும் சிறப்பிக்கப்பட உள்ளது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

2025 ஆம் ஆண்டிற்கான யூபிலிக் கொண்டாட்டங்கள் ஒவ்வொரு நிலையினராலும் ஒவ்வொரு நாளில் சிறப்பிக்கப்பட உள்ள நிலையில் யூபிலிக் கொண்டாட்டங்கள் பற்றிய நிகழ்ச்சிநிரலின் முதல் பகுதியை கடந்த வார நிகழ்வில் நாம் அறிந்துகொண்டோம். இன்று அதன் தொடர்ச்சியாக ஜூன் மாதம் முதல் டிசம்பர் வரையிலான நிகழ்வுகள் பற்றிக் காணலாம்.

ஜூன் மாதம் 7முதல் 8 வரை இயக்கங்கள், அமைப்புகள், புதிய குழுக்கள் மற்றும் செயல்பாடுகளைச் சார்ந்தவர்களாலும், ஜூன் 9 ஆம் நாள் திருப்பீடத்தில் உள்ளவர்களாலும் சிறப்பிக்கப்பட இருக்கின்றது.

ஜூன் 14 மற்றும் 15 ஆகிய நாளிகளில் விளையாட்டு வீரர்களுக்கான யூபிலியாகவும், 20 முதல் 22 நிர்வாகத்தினராலும் கொண்டாடப்பட இருக்கின்றது. ஜூன் 25 திருத்தொண்டர்களுக்கான யூபிலி நாளாகவும், 25 முதல் 27 அருள்பணியாளர்களுக்கான யூபிலி நாளாகவும் சிறப்பிக்கப்பட உள்ளது.

ஜூலை 28, 29 ஆகிய நாள்களில் ஊடக மறைப்பணியாளர்கள் யூபிலி நாளாகவும்,  ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 3 வரை இளைஞர்களுக்கான யூபிலி நாளாகவும் கொண்டாடப்பட இருக்கின்றது.  

செப்டம்பர் 15 ஆற்றுப்படுத்துபவர்களுக்கான யூபிலி நாளாகவும், 20 ஆம் நாள் நீதிக்காக உழைப்பவர்களின் யூபிலி நாளாகவும் சிறப்பிக்கப்பட உள்ளது.

செப்டம்பர் 26 முதல் 28 மறைக்கல்வி ஆசிரியர்களுக்காகவும், அக்டோபர் 4 முதல் 5 உலக மறைப்பணியாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்காகவும், 8 முதல் 9 அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்காகவும், 11 முதல் 12 மரியன்னை ஆன்மிகத்தைக் கடைபிடிப்பவர்களுக்காகவும் சிறப்பிக்கப்பட உள்ளது.

அக்டோபர் 31 முதல் நவம்பர் 2 வரை உலக கல்வியாளர்களுக்காகவும், நவம்பர் 16 அன்று ஏழைகளுக்காகவும், 22 முதல் 23 பாடகர் குழுவினருக்க்காகவும், டிசம்பர் 14 சிறைக்கைதிகளுக்கான நாளாகவும் கொண்டாடப்பட இருக்கின்றது.   

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 October 2024, 14:00