தேடுதல்

திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் இறையியல் திருப்பீடக் கல்லூரியின் குடும்ப ஆய்வுகளுக்கான பன்னாட்டு மையத்தின் உறுப்பினர்கள் திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் இறையியல் திருப்பீடக் கல்லூரியின் குடும்ப ஆய்வுகளுக்கான பன்னாட்டு மையத்தின் உறுப்பினர்கள் 

குடும்ப ஆய்வுக்கான பன்னாட்டு மையத்தின் புகைப்படக் கண்காட்சி

நமது இல்லம் என்ற தலைப்பில் உரோமில் குடும்ப ஆய்வுக்கான பன்னாடு மையத்தின் முதல் 50 ஆண்டு கால செயல்பாடுகள், ஆராய்ச்சிகள் மற்றும் மாநாடுகள் போன்றவற்றை உள்ளடக்கிய புகைப்படக் கண்காட்சியானது நடத்தப்படுகின்றது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

குடும்பம் என்பது மக்களின் உறவு, வேறுபாடு மற்றும் தலைமுறைகளுக்கு இடையேயான உறவுகளை அனுபவிக்கும் ஒரு சலுகை பெற்ற இடமாகும் என்றும், குடும்ப ஆய்வுக்கான பன்னாடு மையத்தின் முதல் 50 ஆண்டு கால செயல்பாடுகள், ஆராய்ச்சிகள் மற்றும் மாநாடுகள் போன்றவற்றை உள்ளடக்கிய புகைப்படக் கண்காட்சியானது உரோமில் நடத்தப்படுகின்றது என்றும் கூறினார் CISF இன் இயக்குநர் பிரான்செஸ்கோ பெல்லெட்டி.

அக்டோபர் 24 அன்று சிறப்பிக்கப்பட இருக்கும் திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் இறையியல் திருப்பீடக் கல்லூரியால் நடத்தப்படும் குடும்ப ஆய்வுகளுக்கான பன்னாட்டு மையத்தின் 50ஆவது ஆண்டை முன்னிட்டு உரோமில் புகைப்படக் கண்காட்சி ஒன்று நடைபெற உள்ளதாக எடுத்துரைத்தார் CISF எனப்படும் குடும்ப ஆய்வுக்கான பன்னாட்டு மையத்தின் இயக்குநர் பிரான்செஸ்கோ பெல்லெட்டி.

நமது இல்லம் என்ற தலைப்பில் உரோமில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த புகைப்படக் கண்காட்சியானது, திருமணம் மற்றும் குடும்பம் பற்றிய அறிவியலுக்காக திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் இறையியல் நிறுவனம் மற்றும் தூய இலாத்தரன் திருப்பீடப் பல்கலைக்கழகத்தின் மீட்பர் மேய்ப்புப்பணி நிறுவனம் ஆகியோரால் இணைந்து நடத்தப்படுகின்றது.

CISF எனப்படும் குடும்பங்களுக்கான பன்னாட்டு மையத்தின் 50 ஆண்டுகால செயல்பாடுகளை எடுத்துரைக்கும் விதமாக 50 புகைப்படங்களும், Roberto Morelli மற்றும் Simone Durante அவர்கள் தங்கள் குடும்பத்தில் அனுபவித்த அக்கறை, பாசம் மற்றும் உறவுகளின் செயல்களை வெளிப்படுத்தும் 10 புகைப்படங்களும் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 October 2024, 16:10