தடம் தந்த தகைமை – ஆகாசு அரசன் செய்த செயல்கள்
மெரினா ராஜ் – வத்திக்கான்
ஏதோம் மன்னன் தன் நாட்டிற்காக ஏலாத்தைக் கைப்பற்றி அங்கிருந்து யூதா மக்களை விரட்டியடித்தான். ஏதோமியர் ஏலாத்திற்குள் நுழைந்து இன்றுவரை அங்கு வாழ்ந்து வருகின்றனர். எனவே, ஆகாசு அசீரிய மன்னன் திக்லத் பிலேசரிடம் தூதனுப்பி “நான் உம் பணியாளன்; உம் மகன், நீர் புறப்பட்டு வந்து என்னை முற்றுகையிட்டிருக்கும் சிரியா மன்னன் கையினின்றும் இஸ்ரயேல் அரசன் கையினின்றும் விடுவிப்பீர்” என்று சொன்னான். மேலும், ஆகாசு ஆண்டவரின் இல்லத்திலும் அரண்மனைக் கருவூலங்களிலும் இருந்த பொன்னையும் வெள்ளியையும் எடுத்து அசீரிய மன்னனுக்கு அன்பளிப்பாக அனுப்பி வைத்தான். அசீரிய மன்னன் அதற்கு இணங்கி, தமஸ்குவைக் கைப்பற்றி அதன் குடிமக்களைக் கீருக்கு நாடு கடத்தினான்.
எனவே, அரசன் ஆகாசு அசீரிய மன்னன் திக்லத் பிலேசரைச் சந்திக்கத் தமஸ்குக்குச் சென்றான். அப்பொழுது, அவன் அந்நகரிலுள்ள பலிபீடத்தைக் கண்டு அதன் வரைபடத்தையும், தன் கட்டமைப்பின் எல்லாக் குறிப்புகளையும் குரு உரியாவுக்கு அனுப்பி வைத்தான். அரசன் ஆகாசு தமஸ்குவிலிருந்து அனுப்பிய பலிபீடக் கட்டமைப்பின் எல்லாக் குறிப்புகளுக்கும் ஏற்ப, குரு உரியா அவன் திரும்பி வருவதற்குள் கட்டி முடித்தார். அரசன் தமஸ்குவிலிருந்து திரும்பி வந்தான். அவன் பலிபீடத்தைக் கண்டு, நெருங்கிச் சென்றான்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்