தேடுதல்

அசீரியா மன்னன் அசீரியா மன்னன் 

தடம் தந்த தகைமை – சமாரியாவை முற்றுகையிட்ட அசீரியா மன்னன்

ஓசேயா ஆட்சியேற்ற ஒன்பதாம் ஆண்டில், அசீரியா மன்னன் சமாரியாவைக் கைப்பற்றி, இஸ்ரயேலரை அசீரியாவுக்கு நாடு கடத்தினான்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

அசீரியா மன்னன், நாடு முழுவதன்மேலும் படையெடுத்து, சமாரியாவுக்கு வந்து, அதை மூன்றாண்டு அளவு முற்றுகையிட்டான். ஓசேயா ஆட்சியேற்ற ஒன்பதாம் ஆண்டில், அசீரியா மன்னன் சமாரியாவைக் கைப்பற்றி, இஸ்ரயேலரை அசீரியாவுக்கு நாடு கடத்தினான். அவர்களை அலகிலும், கோசானின் ஆபோர் நதிக் கரையிலும், மேதியர் நகர்களிலும் குடியேற்றினான். ஏனெனில், இஸ்ரயேல் மக்கள் தங்களை எகிப்து நாட்டினின்றும் அந்நாட்டு மன்னன் பார்வோனின் கையினின்றும் விடுவித்திருந்த தங்கள் கடவுளான ஆண்டவருக்கு எதிராய்ப் பாவம் செய்து வேற்றுத் தெய்வங்களைத் தொழுது வந்தனர்.

மேலும், இஸ்ரயேல் மக்கள் முன்னிலையிலிருந்து ஆண்டவர் விரட்டியடித்த வேற்றினத்தாரின் விதிமுறைகளின்படியும். இஸ்ரயேல் அரசர்கள் புகுத்திய வழக்கங்களின்படியும் நடந்து வந்தனர். இஸ்ரயேல் மக்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராகத் தகாதனவற்றை மறைவாய்ச் செய்தனர்; மேலும், காவல் மாடம் முதல் அரண்சூழ் கோட்டைவரை எல்லா நகர்களிலும் தங்களுக்குத் தொழுகை மேடுகளை அமைத்துக் கொண்டனர்;

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 November 2024, 11:10