தேடுதல்

மீன் பிடிக்க தயார் நிலையில் மீனவர்கள் மீன் பிடிக்க தயார் நிலையில் மீனவர்கள்  (ANSA)

தடம் தந்த தகைமை : மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்

தான் அறிமுகப்படுத்துகின்ற இறையாட்சி இயக்கம் எளிதாக ஏற்கப்படாது என்பதையும், எண்ணற்ற எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டுமென்பதையும், ஏராளமான தாக்குதல்கள் எழும் என்பதையும் உள்ளூர உணர்ந்திருந்தார் இயேசு.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன் (மாற் 1:17) என்றார் இயேசு.

தொண்டர்களைக் கூட்டிக் குண்டர்களாக மாற்றும் இன்றைய அரசியல் சூழலில் பாமரர்களை அழைத்துப் பணிவிடையாளர்களாக்கிய இயேசுவின் யுக்தி வித்தியாசமானது. யாரோடு கூட்டு சேர்ந்தாலும், கூத்தடித்தாலும் தனக்கான இலாபம் என்ன என எண்ணும் உலகில் மனிதரைப் பிடிக்க அழைக்கும் மாற்றுச் சிந்தனை நம்மை மலைக்க வைக்கின்றது. எதற்காகப் பின்தொடர வேண்டும் என்ற எதிர் கேள்விக்கு இங்கு இடமில்லை. இலக்கு தெளிவானால் பணிகளில் பதட்டமிருக்காது.

இயேசு நல்ல தலைமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. தான் அறிமுகப்படுத்துகின்ற இறையாட்சி இயக்கம் எளிதாக ஏற்கப்படாது என நன்கு தெரிந்தவர். எண்ணற்ற எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டுமெனப் புரிந்தவர். ஏராளமான தாக்குதல்கள் எழும் என உள்ளூர உணர்ந்தவர். எனவே 'எதிர்க்கப்படும் அடையாளமான' (லூக் 2:34) தன்னை முன்னிறுத்தி, புத்தம்புதுச் சீடர்களைப் பின்னிறுத்துகின்றார். இது அவரது தற்கையளிப்பு மனநிலையின் தன்னிகரற்ற அணுகுமுறை. தரணி காக்கும் பணியில் தன்னைப் பின்தொடர்வோரைப் பாதுகாப்பது தன் மேலான கடமை எனக் கருத்தில் கொண்டிருந்தார்.

அழைப்பு செவிமடுத்தலில் மட்டுமல்ல, பின்தொடர்ந்து செயல்படுத்தலில்தான் முழுமையடைகிறது.

இறைவா! நற்பணிக்கான அழைப்பெல்லாம் உம்மிடமிருந்தே! அதை மனதாரப் புரிந்து முழுமையாகப் பின்தொடரும் சக்தி தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 November 2024, 10:28