தேடுதல்

மனந்திரும்பலுக்கு செபம் மனந்திரும்பலுக்கு செபம் 

தடம் தந்த தகைமை - மனம் மாறுங்கள்

ஓர் அடிப்படை ஆற்றுப்படுத்தல் அவசியமென உணர்ந்த இயேசு “மனம் மாறுங்கள்” எனத் தனது குரலை உயர்த்தினார். மனமாற்றமே மிகப் புனிதமானதும் தேவையானதும் ஆகும்.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

மனம் மாறுங்கள். ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது (மத் 4:17) என்றார் இயேசு

மரபுகள் துணையாய் இருந்தன. வழிபாடுகள் சடங்குமயப்பட்டிருந்தன. உரோமையரின் ஆதிக்கத்தின் கீழ் யாவும் அடிமைப்பட்டிருந்த அவலம். எகிப்திய அடிமைத்தனம் இன்னும் பல வடிவங்களில் கோலோச்சியது. ஆதிக்க அரசியல்வாதிகளின் அராஜகமும் எதிர்ப்பு வன்முறை அரசியல்வாதிகளின் தாக்குதல்களும்  ஆளும் வர்க்கத்தினருக்கு ஒத்துழைத்து பிழைப்பு பார்த்தவர்களின் நரித்தன சூழ்ச்சிகளும் ஏழைகளைத் திக்குமுக்காடச் செய்தன.

இவைதவிர சமய ரீதியாகப் பரிசேயர் சதுசேயர் சட்டவல்லுநர் கும்ரான் குழுமத்தினர் திருக்காட்சி இயக்கத்தினர் எனப் பல்வேறுபட்ட குழுக்கள். பொருளாதாரச் சரிவினால் அரசின் மீதான காழ்ப்புணர்வோடு தீவிரவாதப் போராளிக் குழுக்கள் கொள்ளைக்காரக் குழுக்கள் உருவெடுத்து புரட்சிகள் வெடிப்பதும் அதை அடக்குவதுமான பதட்டச் சூழல். எல்லாவற்றிற்கும் மேலாக அடித்தட்டு மக்கள் மீதான கடும் வரிச்சுமைகள் என எல்லாம் சேர்த்து பாலஸ்தீனம் பரிதாபகரமானதாகக் காட்சியளித்தது. இந்நேரத்தில் ஓர் அடிப்படை ஆற்றுப்படுத்தல் அவசியமென உணர்ந்த இயேசு “மனம் மாறுங்கள்” எனத் தனது குரலை

உயர்த்தினார். மனிதரின் எல்லாச் செயல்களிலும் மனமாற்றமே மிகப் புனிதமானதும் தேவையானதும் ஆகும்.

இறைவா! முதலில் என்னை மாற்ற எனக்கு வலிமை தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 November 2024, 15:19