தடம் தந்த தகைமை – கடவுளுக்குப் பணிய மறுத்த மக்கள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
இஸ்ரயேல் மக்கள் கடவுளின் குரலுக்கு செவிகொடுக்கவில்லை. அவர்கள் மூதாதையர் தங்கள் ஆண்டவர் மீது நம்பிக்கை இழந்து பணிய மறுத்தது போல, அவர்களும் வணங்காக் கழுத்தர்களாக இருந்தனர்; ஆண்டவரின் நியமங்களையும், தங்கள் மூதாதையரோடு அவர் செய்திருந்த உடன்படிக்கையையும், தங்களுக்கு அவர் விடுத்திருந்த எச்சரிக்கைகளையும் புறக்கணித்தனர், வீணானவற்றைப் பின்பற்றி வீணர் ஆயினர்; ‘வேற்றினத்தாரைப் பின்பற்றலாகாது’ என்று ஆண்டவர் இட்ட கட்டளைக்கு மாறாக, தங்களைச் சூழ்ந்திருந்த அவர்களைப் பின்பற்றி நடந்தனர்.
தங்கள் கடவுளான ஆண்டவரின் எல்லாக் கட்டளைகளையும் கைவிட்டனர்; இரண்டு கன்றுகளைத் தங்களுக்கென வார்த்துக்கொண்டு, அசேராக் கம்பம் நிறுத்தி, வானத்தின் அணிகளுக்குத் தலைவணங்கி, பாகாலை வழிபட்டனர்; தங்கள் புதல்வரையும், புதல்வியரையும் நெருப்பில் பலியிட்டனர். குறிகேட்டும் சூனியம் வைத்தும் வந்தனர்; ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்து அவருக்குச் சினமூட்டுமாறு தங்களையே விற்று விட்டனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்