நேர்காணல் – தூய இலாத்தரன் பெருங்கோவில் சிறப்புக்கள்
மெரினா ராஜ் – வத்திக்கான்
ஆலயம் என்பது ஆண்டவன் இறைவன் வாழ்கின்ற இல்லம் என்பது பொருள். ஆலயத்திற்கு கோவில் என்ற பெயரும் உண்டு. ஆ என்றால் மனிதர்கள் உள்ளிட்ட உயிர்கள் ஆன்மாக்கள். லயம் என்றால் ஒருமைப்படுதல். இறைவனால் படைக்கப்பட்ட உயிர்கள் மனம் ஒன்றி லயிக்கும் இடமே ஆலயம். நமது மனம் சோர்வடையும்போது புத்துணர்ச்சி அளிக்கின்ற இடமே ஆலயம் என்று சொன்னால் மிகையாகாது. கோ என்பதற்கு கடவுள் அல்லது அரசன் என்று பொருள். இல் என்றால் குடியிருக்குமிடம், இல்லம் என்று பொருள். எனவே கோவில், ஆலயம் எனப்படுவது கடவுள் குடியிருக்குமிடம் என்பதாகும்.
பேராலயங்களுக்குப் பெயர் போன உரோம் நகரில் ஆலயங்களுக்கு எல்லாம் முதல் ஆலயமாக, தாய் ஆலயமாக விளங்கும் தூய இலாத்தரன் பெருங்கோவில் நேர்ந்தளிப்பு விழாவினை வருகின்ற நவம்பர் 9ஆம் நாள் சிறப்பிக்க இருக்கும் வேளையில் அவ்வாலயம் பற்றிய சிறப்புக்களை நமக்கு எடுத்துரைப்பவர் அருள்பணி. ஆண்டனி ஃப்ராங்க். இரட்சகர் சபையைச் சார்ந்த அருள்பணி ஆண்டனி ஃப்ராங்க் அவர்கள், தற்போது கிரகோரியன் பல்கலைக்கழகத்தில் திருஅவையின் வரலாற்றில் முதுகலைப் படிப்பினைப் பயின்று கொண்டிருக்கின்றார். தந்தை அவர்களை இலாத்தரன் பெருங்கோவில் சிறப்புக்கள் பற்றி எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்