தேடுதல்

வட அரேபியாவில் பேராயர் ரஃபேல் தட்டில் வட அரேபியாவில் பேராயர் ரஃபேல் தட்டில் 

வட அரேபியாவில் சீரோ மலபார் தலைவரின் பயணம்

கத்தார், குவைத் மற்றும் பஹ்ரைனில் பயணம் மேற்கொண்டு அங்குள்ள விசுவாசிகளை சந்தித்து விசுவாசத்தில் பலப்படுத்தியுள்ளார் சீரோ மலபார் வழிபாட்டுமுறை தலைவர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

மத்தியக் கிழக்கில் வாழும் சிரோமலபார் வழிபாட்டுமுறை விசுவாசிகளை சந்தித்து அவர்களை விசுவாசம் மற்றும் ஒருமைப்பாட்டில் அவர்களின் பிணைப்பை பலப்படுத்தும் நோக்கில் வட அரேபிய பகுதியில் மேய்ப்புப்பணி சார்ந்த பயணத்தை நிறைவுச் செய்துள்ளார் சீரோ மலபார் வழிபாட்டுமுறையின் தலைவர், பேராயர் Raphael Thattil.

கத்தார், குவைத் மற்றும் பஹ்ரைனில் பயணம் மேற்கொண்டு அங்குள்ள விசுவாசிகளை சந்தித்த பேராயர், அவர்களின் விசுவாசத்துடனும் பாரம்பரியத்துடனும் நல்ல தொடர்பைக் கொண்டிருப்பதுடன், தற்போது வாழும் புதிய சூழலுக்கு சிறப்பு பங்களிப்பு வழங்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இந்தியாவின் கேரளாவை தலைமையிடமாகக் கொண்ட சீரோ மலபார் வழிபாட்டுமுறை திருஅவை, தங்கள் விசுவாசிகள் இருக்கும் இடங்களில் சென்று அவர்களின் மொழியிலேயே, மற்றும் வழிபாட்டு முறையிலேயே மறைப்பணியாற்றி வருகிறது.

நவீன உலகின் சவால்களில் எதிர்நீச்சல் போடும்போது, சமூகம், ஒன்றிப்பு மற்றும் விசுவாசத்தின் முக்கியத்துவத்தை இந்த மேய்ப்புப்பணி பயணத்தின்போது வலியுறுத்திய பேராயர் தட்டில் அவர்கள், தாங்கள் புதிதாக வந்திருக்கும் சமுதாயத்திற்கு விசுவாசிகள் சிறப்புப் பங்களிப்பு வழங்கவேண்டிய தேவையையும் வலியுறுத்தினார்.

சீரோ மலபார் வழிபாட்டுமுறை திருஅவையின் தலைவர் பேராயர் தட்டில் அவர்கள் வட அரேபியாவில் மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்டபோது, அப்பகுதிக்கான அப்போஸ்தலிக்க பிரதிநிதி ஆயர் Aldo Berardiயும் உடனிருந்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 November 2024, 15:36