தேடுதல்

முதுபெரும்தந்தை பத்தாம் Yohanna Yazigi. முதுபெரும்தந்தை பத்தாம் Yohanna Yazigi. 

நாம் அனைவரும் ஒரே இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கின்றோம்

நாங்கள் விருந்தினர்களல்ல, மாறாக இயேசு கிறிஸ்து என்ற பெயரை இந்த பிரபஞ்சத்திற்கு அடையாளப்படுத்திய அந்தியோக்கு திருத்தூதர்களிடமிருந்து வந்தவர்கள் நாங்கள் - முதுபெரும்தந்தை பத்தாம் யோஹன்னா.

மெரினா ராஜ் - வத்திக்கான்

முஸ்லீம் சகோதரர்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள் என நாம் அனைவரும் ஒரே இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கின்றோம் என்றும், நமது பொதுவான வரலாறுகள் அனைத்தும் பல ஏற்ற இறக்கங்களைக் கொண்டுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார் அந்தியோக்கு கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தை பத்தாம் Yohanna Yazigi.

அண்மையில் தமாஸ்கஸ் பகுதியில் நடைபெற்ற திருப்பலியின்போது இவ்வாறு எடுத்துரைத்த அந்தியோக்கு நகர கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தை பத்தாம் Yohanna Yazigi அவர்கள், அசாத்துக்குப் பிந்தைய சிரியாவின் எதிர்காலம், பல சிரிய கிறிஸ்தவர்களின் உணர்வுகள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து எடுத்துரைத்துள்ளார்.

தமாஸ்கு நகரத்தில் இருக்கும் லெபனோன் சேதார்,ஹோம்ஸ், அலேப்போ, இட்லிப், லதாகி, யூப்ரடீஸ் ஆகிய பகுதிகளிலிருந்து வந்திருக்கும் மக்கள் அனைவரும் விருந்தினர்கள் அல்ல என்றும், இன்றைய நேற்றைய குழந்தைகள் அல்ல மாறாக இயேசு கிறிஸ்து என்ற பெயரை இந்த பிரபஞ்சத்திற்கு அடையாளப்படுத்திய அந்தியோக்கு திருத்தூதர்களிடமிருந்து வந்தவர்கள் என்று கூறியுள்ளார் முதுபெரும்தந்தை பத்தாம் யோஹன்னா.

தனிப்பட்ட நிலை சட்டங்களைப் பராமரிப்பது உட்பட அனைவருக்கும் ஒரே உரிமைகள் மற்றும் கடமைகளைக் கொண்ட ஒரு சிவில் அரசை உடைய சிரியாவை நாங்கள் விரும்புகின்றோம் என்று சுட்டிக்காட்டியுள்ள முதுபெரும்தந்தை அவர்கள், பெரும்பான்மையினர் மற்றும் சிறுபான்மையினர் என்ற வேறுபாட்டை தவிர்த்து ஒரே குடிமக்கள் என்ற தேசியக் கட்டமைப்பைக் கொண்ட கொள்கையின் அடிப்படையில் அமைந்த ஓர் அரசை மக்கள் விரும்புகின்றார்கள் என்றூம் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பை உருவாக்கும் செயல்முறை ஒரு விரிவான மற்றும் முழுமையான தேசிய செயல்முறையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள முதுபெரும்தந்தை பத்தாம் யோஹன்னா அவர்கள், சர்வதேச ஊடகங்கள் சிரியாவில் உள்ள கிறிஸ்தவர்கள் மீது காட்டும் ஆர்வத்தை கருத்தில் கொண்டு பலவற்றை வெளியிடுகின்றன எனவே ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் "எந்தவொரு பொறுப்புணர்வும் இல்லாமல் பரப்பப்படும் பல வதந்திகளை" நம்ப வேண்டாம் என்றும் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 December 2024, 12:54