தேடுதல்

எருசலேமை நோக்கி வரும் அசீரியர்கள் எருசலேமை நோக்கி வரும் அசீரியர்கள்  

தடம் தந்த தகைமை - எருசலேமைத் தாக்கிய அசீரியர்கள்

அசீரிய மன்னன் இலாக்கிசிலிருந்து தர்த்தானையும் இரப்சாரிசையும் இரப்சாக்கேயையும் பெரும் படையுடன் எருசலேமுக்கு அரசர் எசேக்கியாவுக்கு எதிராக அனுப்பினான்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

எசேக்கியா அரசன் ஆட்சியேற்ற பதினான்காம் ஆண்டில் அசீரிய மன்னன் சனகெரிபு யூதாவிலிருந்த அரண்சூழ் நகர்கள் அனைத்தையும் முற்றுகையிட்டுக் கைப்பற்றினான். அப்போது, யூதா அரசர் எசேக்கியா இலாக்கிசிலிருந்து அசீரிய மன்னனிடம் தூதனுப்பி, “நான் பாவம் செய்துவிட்டேன். எனவே, என்னை விட்டுத் திரும்பிச் செல்லும். நீர் கேட்பதை நான் தந்து விடுகிறேன்” என்றார். அப்படியே அசீரிய மன்னன், யூதா அரசர் எசேக்கியாவை பன்னிரண்டாயிரம் கிலோ கிராம் வெள்ளியும் ஆயிரத்து இருநூறு கிலோ கிராம் பொன்னும் செலுத்துமாறு கட்டளையிட்டான்.

எசேக்கியா ஆண்டவரது இல்லத்திலும், அரசரது அரண்மனைக் கருவூலங்களிலும் காணப்பட்ட எல்லா வெள்ளியையும் கொடுத்தார். இச்சமயம் யூதா அரசர் எசேக்கியா, ஆண்டவரின் இல்லக் கதவுகளிலும் கதவு நிலைகளிலும், தாம் பதித்திருந்த பொன் தகடுகளைக் கழற்றி அசீரிய மன்னனுக்குக் கொடுத்தார். ஆயினும், அசீரிய மன்னன் இலாக்கிசிலிருந்து தர்த்தானையும் இரப்சாரிசையும் இரப்சாக்கேயையும் பெரும் படையுடன் எருசலேமுக்கு அரசர் எசேக்கியாவுக்கு எதிராக அனுப்பினான்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 December 2024, 13:29