தேடுதல்

இரப்சாக்கே  மக்கள் முன் இரப்சாக்கே மக்கள் முன் 

தடம் தந்த தகைமை – இரப்சாக்கே எடுத்துரைத்த அசீரிய மன்னனின் வாக்கு

எசேக்கியா உங்களை ஏமாற்ற விடாதீர்கள். ஏனெனில், உங்களை என் கையிலிருந்து விடுவிக்க அவனால் முடியாது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

இல்க்கியாவின் மகன் எலியாக்கிமும், செபுனாவும், யோவாகும் இரப்சாக்கேயை நோக்கி, “உம் பணியாளராகிய எங்களோடு சிரியா மொழியிலேயே பேசும். அது எங்களுக்குப் புரியும். மதிலின்மேல் இருக்கும் மக்கள் காதில் விழும்படியாக யூத மொழியில் எங்களோடு பேச வேண்டாம்” என்றனர். அதற்கு அவன் அவர்களிடம், “என் தலைவர் என்னை அனுப்பியது உங்கள் தலைவரிடமும் உங்களிடமும் மட்டுமா? இல்லை. ....... உங்களுடன் மடியவிருக்கும் மதிற்சுவர் ஆள்களுக்கும் இது புரியட்டும்” என்றான். இதன்பின் இரப்சாக்கே எழுந்து நின்று யூத மொழியில் உரத்த குரலில் பேசலானான்: “மாவேந்தரான அசீரிய மன்னரின் வார்த்தையைக் கேளுங்கள்.

அவர் கூறுவது இதுவே: எசேக்கியா உங்களை ஏமாற்ற விடாதீர்கள். ஏனெனில், உங்களை என் கையிலிருந்து விடுவிக்க அவனால் முடியாது. அவன், ‘ஆண்டவர் நம்மை விடுவிப்பது உறுதி. இந் நகர் அசீரிய மன்னனின் கையில் ஒப்பவிக்கப்படாது’ என்று கூறி உங்களை ஆண்டவரிடம் நம்பிக்கை கொள்ளச் செய்வான். எசேக்கியாவின் சொல்லுக்குச் செவி கொடாதீர்கள். ஏனெனில், அசீரிய மன்னர் கூறுவது இதுவே: நீங்கள் என்னோடு சமாதானம் செய்து கொண்டு வெளியே என்னிடம் வாருங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் தம் சொந்த திராட்சைக் கொடியின் பழத்தைச் சுவைத்து, தம் சொந்த அத்திமரத்தின் பழத்தைத் தின்று, சொந்தக் கிணற்றின் தண்ணீரைக் குடிக்கலாம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 December 2024, 10:52