தேடுதல்

தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் இந்தியக் கிறிஸ்தவர்கள் (கோப்புப் படம்) தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் இந்தியக் கிறிஸ்தவர்கள் (கோப்புப் படம்)   (AFP or licensors)

குழந்தைகள் மீதான இந்திய அரசின் புதிய உத்தரவிற்கு கிறித்தவர்கள் எதிர்ப்பு!

இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் மத்தியப்பிரதேச மாநிலத்தில் (7 கோடியே 20 இலட்சம்) வெறும் 0.29 விழுக்காடு மட்டுமே கிறிஸ்தவர்கள் உள்ளனர்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் அண்மைய ஆண்டுகளில் அதிகரித்து வரும் நிலையில், அந்த மாநிலத்தின் குழந்தைகள் உரிமைகள் துறையால் பள்ளி நிகழ்வுகளில் பங்கேற்க குழந்தைகளுக்கு பெற்றோர்களிடமிருந்து எழுத்துப்பூர்வமான அனுமதி பெறக் கோரிய பணிப்பதிவை அங்கு உள்ள கிறிஸ்தவரக்ள் கண்டித்து வருவதாக கூறியுள்ளது யூக்கான செய்தி நிறுவனம்.

இதுபற்றி கருத்துத் தெரிவித்த ஜபல்பூர் மறைமாவட்டத்தின் கல்வியாளர் அருள்பணியாளர் தங்கச்சன் ஜோஸ் அவர்கள், அந்த அதிகாரத்திற்குப் பின்னால் ஒரு  மறைமுக நோக்கம் உள்ளது என்றும், இது அறிவியல் மற்றும் கல்வி மையங்களை இயக்கும் பள்ளிகள் மற்றும் அதில் கொண்டாடப்படவிருக்கும் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளை தடுக்க எடுக்கும் முயற்சி என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

டிசம்பர் 12-ஆம் தேதி, மத்தியப் பிரதேச குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், மாநிலம் முழுவதும் இந்த ஆணையை கிறிஸ்துமஸ் விழாவிற்கு மிக அருகிலே பிறப்பித்து அரசு எங்களை அச்சுறுத்த முற்படுகிறது என்றும், டிசம்பர் 18, இப்புதனன்று யூக்கான் செய்தி நிறுவனத்திடம் உரைத்துள்ளார் பணியாளர் ஜோஸ்.

எந்த இந்து திருவிழாவுக்கும் முன்னதாக இந்த வகையான கட்டளை பிறப்பிக்கப்படுவது எப்போதும் காணப்படுவதில்லை. ஆனால், இந்தக் கல்வியாண்டின் தொடக்கத்திலேயே ஒரு பொதுவான கொள்கையாக இதைப் பிறப்பித்திருந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் அருள்பணியாளர் ஜோஸ்.

கிறிஸ்தவராக இருக்கின்ற பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இவ்வாறான கட்டளையை புறக்கணிக்கின்றனர், ஏனெனில் அவர்கள் கிறிஸ்துமஸ் நிகழ்வுகளில் பங்கேற்க மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்றும் எடுத்துக்காட்டியுள்ளார் அருள்பணியாளர் ஜோஸ்.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்து ஆதரவு பாரதிய ஜனதா கட்சி (BJP) அரசு, 2023-ஆம் ஆண்டிலும்  இதேபோன்ற ஒரு  உத்தரவை பிறப்பித்தது என்றும், அனைத்துத் தனியார் பள்ளிகளும் கிறிஸ்துமஸ் தொடர்பான நிகழ்வுகளில் மாணவர்களை ஈடுபடுத்துவதற்கு முன் பெற்றோரிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று அறிவுறுத்தியது என்றும் அனைத்துக் கிறிஸ்தவர் கூட்டமைப்பின் தலைவர் Jerry Paul அவர்களும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய மற்றும் மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு அமைப்புகள் கிறிஸ்தவ பள்ளிகள், விடுதிகள் மற்றும் ஆதரவற்றோர் இல்ல அதிகாரிகள் மீது பல வழக்குகளை பதிவு செய்துள்ளன என்றும், ஓய்வு பெற்ற ஆயர்  மற்றும் சில அருள்பணியாளர்கள் மற்றும் அருள்சகோதரிகள் மீது, மத மாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி, பிற குற்றச்சாட்டுகள் உட்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் எடுத்துக்காட்டுகிறது அச்செய்திக் குறிப்பு.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 December 2024, 12:28