இலங்கையில் தலத்திருஅவையின் பணியில் பொதுநிலையினர் குறித்த கண்காட்சி
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இலங்கையில் இடம்பெற்ற தலத்திருஅவையின் பணியில் பொதுநிலையினரின் பங்களிப்பு குறித்த இரண்டு நாள் கண்காட்சியில் நூற்றுக்கணக்கான கத்தோலிக்க அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள், பொதுநிலை விசுவாசிகள் மற்றும் சிறுவர்கள் கலந்துகொண்டனர் என்று கூறியுள்ளது யூக்கான் செய்தி நிறுவனம்.
"ஆனால் நடப்போம்" (But Let’s Walk) என்ற கருப்பொருளில், அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள் மற்றும் பொதுநிலை விசுவாசிகளை உள்ளடக்கிய 'கித்துசரா' (Kithusara) என்ற அமைப்பு இம்மாதம் 8,9 தேதிகளில் வடக்கு நீர்கொழும்பில் (Negomb) உள்ள புனித யோசேப்பு பள்ளியில் இக்கண்காட்சியை ஏற்பாடு செய்தது என்றும் அச்செய்தி நிறுவனம் மேலும் உரைக்கிறது.
இதுகுறித்து இச்செய்தி நிறுவனத்திற்கு நேர்காணல் வழங்கிய தனது பட்டதாரி படிப்பிற்காக கிறிஸ்தவ கலாச்சாரத்தைப் பயின்ற பெண்மணி நயனி அனுத்தாரா அவர்கள், இந்தக் கண்காட்சிகள் இன்றைய உலகில் முக்கிய பிரச்சனைகள் மற்றும் பொதுநிலையினரின் பணியை வெளிப்படுத்தியுள்ளது என்று கூறினார்.
மேலும் இந்தக் கண்காட்சியானது கிறிஸ்தவ விழுமியங்கள் மற்றும் செயல்களை முன்னேற்றுவதில் பொதுநிலையினரின் பங்களிப்புகள் மற்றும் பொறுப்புகளை எடுத்துக்காட்டுகிறது என்றும், பார்வையாளர்கள் சமூகத்தில் அவர்களின் பணியைப் பற்றிய ஆழமான புரிதலைப் பெற அனுமதிக்கிறது என்றும் குறிப்பிட்டார் அனுத்தாரா.
அதேவேளையில் இந்தக் கண்காட்சிக் குறித்துப் பேசிய மாணவி சுரினி உத்பலா, அர்த்தமுள்ள இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்த அனைவருக்கும் தான் நன்றி தெரிவிப்பதாகவும், இதன்வழியாக, முன்பு அறியாத பல விடயங்களை இப்போது தாங்கள் கற்றுக்கொண்டதாகவும் கூறினார்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்