தேடுதல்

யூபிலி 2025 யூபிலி 2025  

நேர்காணல் – எதிர்நோக்கின் திருப்பயணிகள் புத்தக விளக்கம் பகுதி 3

இறைவேண்டலின் வழியாக மக்கள் அனைவரும் ஒரே கடவுளை நோக்கித் திரும்பவும், அவரிடமே நம் இதயத்தின் ஆழத்தில் பொதிந்துள்ள எண்ணங்களையும், ஏக்கங்களையும் வெளிப்படுத்தவும் நாம் அனுமதிக்க வேண்டும்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

அன்பு நேயர்களே 2025 ஆம் ஆண்டு யூபிலி ஆண்டை சிறப்பிக்க ஆர்வமுடன் காத்திருக்கும் நாம் நமது நேர்காணலில் எதிர்நோக்கின் திருப்பயணிகள் என்ற புத்தகத்தின் விளக்கம் குறித்து அதன் ஆசிரியர் அருள்பணி முனைவர் செ. மைக்கில் ராஜ் அவர்களின் கருத்துக்களைக் கடந்த இரண்டு வாரமாக அறிந்து வந்தோம் இன்று அதன் மூன்றாவதும் இறுதிப்பகுதியுமாகிய யூபிலி ஆண்டின் மையக்கருத்து பற்றியக் கருத்துக்களைக் காணலாம்.

நேர்காணல் -அருள்பணி முனைவர் செ. மைக்கில் ராஜ்

எதிர்நோக்கின் திருப்பயணிகள் என்ற புத்தகத்திலிருந்து

யூபிலி ஆண்டில் நம் சமூகக் கடமைகள்

கடவுளின் அன்புக்காகவும், அவர் நம்மீது பொழிந்துள்ள பல்வேறு கொடைகளுக்காகவும், அவருடைய படைப்பு எனும் அவரின் கைவேலைப்பாட்டுக்காகவும் நன்றிகூறி அதன் தொடர்ச்சியாக, இயற்கையைப் பேணவும், பாதுகாக்கவும், அதனைக் கருத்தோடு கவனித்து வளர்க்கவும் தேவையான திட்டங்களை நமது பொறுப்பான செயல்பாடுகளை நிகழ்த்தி அதைப் பராமரிக்கவும் செயல் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். ''நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர்" (திப 4:32) என்ற வாக்கு நாம் கூடி இறைவேண்டல் செய்வதில் உண்மையாக வேண்டும். இறைவேண்டல் என்பது தொடர்ந்து நம்மை ஒன்றிப்பு உறவுக்கும், நமது அன்றாட உணவைப் பிறரோடு பகிர்ந்து கொள்ளவும் நமக்கு வழிகாட்ட வேண்டும். இறைவேண்டலின் வழியாக மக்கள் அனைவரும் ஒரே கடவுளை நோக்கித் திரும்பவும், அவரிடமே நம் இதயத்தின் ஆழத்தில் பொதிந்துள்ள எண்ணங்களையும், ஏக்கங்களையும் வெளிப்படுத்தவும் நாம் அனுமதிக்க வேண்டும். இறைவேண்டல் என்பது புனிதத்தை நோக்கிய மிக உயர்ந்த பாதையாகவும், நம் மானிட பல்வேறு செயல்பாடுகளின் மத்தியிலும் நம்மை இறைவனோடு ஒன்றிக்கும் வழியாகவும் அமைகிறது.

நிறைவாக, ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், இது ஆழமான, பொருள் நிறைந்த செயல்பாட்டுக்கு நம்மை இட்டுச் செல்லும் இறைவேண்டலின் காலமாகவும், நம் இதயங்களை இறைவனுக்குத் திறந்து வைக்கும் நேரமாகவும் அதன்வழியாக, இறைவனின் அணைகடந்த அருள்பொழிவும் அவரின் அன்பையும் அருளையும் பெற்று, இயேசு நமக்கும் கற்றுக் கொடுத்த 'விண்ணகத்தில் உள்ள எங்கள் தந்தையே' எனும இறைவேண்டல், இயேசுவின் சீடர்களாகிய நாம் நமது வாழ்வாகவும் பணியாகவும் அமைத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

நம் அன்னை மரியா நம்மோடு இணைந்து பயணிக்கவும் இந்த அருள்பொழியும் யூபிலித் தயாரிப்பின் காலத்தில், நம்மை வழிநடத்தி புலரவிருக்கும் புனித ஆண்டுக்கு, அருளின் ஆண்டுக்கு நம்மை அழைத்துச் செல்லட்டும். மிகுந்த நன்றியுடன் உங்கள் அனைவருக்கும் என் ஆசியை வழங்குகிறேன் - திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 December 2024, 11:15