தேடுதல்

வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் 

திருஅவையில் யூபிலி ஆண்டு 2025 – ஆணை மடல் பகுதி 8

உண்மையில் கடவுளின் சாயலிலும் உருவிலும் படைக்கப்பட்ட மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் வாழ்வின் மகிழ்ச்சியை மீட்டெடுக்க வேண்டும்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

எதிர்காலத்தை ஒரு தொலைநோக்குடன் பார்ப்பது, வாழ்க்கையில் உற்சாகம் நிறைந்த கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பதற்குச் சமம். பல சூழ்நிலைகளில் அத்தகைய தொலைநோக்கு குறைவாக இருப்பதை நாம் வருத்தத்துடன் கவனிக்க வேண்டும். முதலாவதாக, வாழ்க்கையைக் கடந்து செல்லும் ஆசையை இழக்கின்றோம். வாழ்க்கையின் பரபரப்பான வேகம், எதிர்காலத்தைப் பற்றிய பயம், உறுதியற்ற வேலை, சமூகப் பாதுகாப்பின்மை, உறவுகளைப் பேணுவதற்குப் பதிலாக இலாபத்தைப் பின்தொடர்தல், போன்றவற்றினால் நாம் இந்த சூழலுக்கு உட்படுத்தப்படுகின்றோம்.

பொறுப்புணர்வுமிக்க தாய், தந்தையருடன் வாழ்வதற்கான திறந்தநிலை என்பது படைப்பாளராகிய இறைவன் ஒவ்வொரு ஆண் மற்றும் பெண்ணின் இதயங்களிலும் உடலிலும் பொறித்த திட்டமாகும். இது இறைவன் வாழ்க்கைத் துணைவர்களுக்கும் அவர்களின் அன்பிற்கும் ஒப்படைக்கும் பணியாகும். புதிய மக்களை உருவாக்கும் விருப்பம் மற்றும் அன்பின் பலன், ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு எதிர்காலத்தை அளிக்கிறது, நம்பிக்கைக்குரிய ஒன்றாக மாறுகின்றது. இது எதிர்நோக்கைச் சார்ந்துள்ளது எதிர்நோக்கை நம்மில் உருவாக்குகிறது.

எதிர்நோக்கிற்கான சமூகக் கூட்டணியின் அவசியத்தை ஆதரிப்பதில் கருத்தியல் அளவில் கிறிஸ்தவ சமூகம் இரண்டாவதாக இருக்க முடியாது. உலகின் பல பகுதிகளில் பல வெற்று தொட்டில்களை நாம் காண்கின்றோம். உண்மையில் கடவுளின் சாயலிலும் உருவிலும் படைக்கப்பட்ட மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் வாழ்வின் மகிழ்ச்சியை மீட்டெடுக்க வேண்டும். வெறுமனே உயிர்வாழ்வதிலும், பொருளைச்சார்ந்து வாழ்வதிலும் மட்டும் நாம் திருப்தியடைய முடியாது. ஏனெனில் அது நம்மை தன்னலத்தில் அடைத்து, நமது எதிர்நோக்கைச் நம்பிக்கையை சிதைத்து, இதயத்தில் எப்போதும் பதுங்கியிருக்கும் ஒரு சோகத்தை உருவாக்கி, நம்மை புளிப்பாகவும் பொறுமையற்றவராகவும் ஆக்குகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 December 2024, 11:42