தேடுதல்

யூபிலி ஆண்டில் ஊதப்படும் எக்காள ஒலி யூபிலி ஆண்டில் ஊதப்படும் எக்காள ஒலி 

திருஅவையில் யூபிலி ஆண்டு 2025 – ஆணைமடல் பகுதி -7

அமைதிக்கான தேவை நம் அனைவருக்கும் சவாலாக உள்ளது. உறுதியானஅமைதிக்கானத் திட்டங்களைத் தொடர யூபிலி ஆண்டு நமக்கு அழைப்பு விடுக்கிறது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

எதிர்நோக்கின் அடையாளங்கள்

கடவுளின் அருளிலிருந்து எதிர்நோக்கைப் பெறுவதோடு, அவர் நமக்கு வழங்கும் காலங்களின் அடையாளங்களில் அதை மீண்டும் கண்டுபிடிக்கவும் நாம் அழைக்கப்படுகிறோம். இரண்டாவது வத்திக்கான் சங்கம் கூறுவது போல், “காலத்தின் அடையாளங்களை ஆராய்ந்து அவற்றை நற்செய்தியின் வெளிச்சத்தில் விளக்குவது திருஅவையின் நிரந்தர கடமை.  இதனால், ஒவ்வொரு தலைமுறைக்கும் ஏற்ற வகையில், அனைத்து மனிதர்களின் தற்போதைய மற்றும் எதிர்கால வாழ்க்கையின் அர்த்தம் மற்றும் அவர்களின் பரஸ்பர உறவுகள் பற்றி நிலையான கேள்விகளுக்கு திருஅவை பதிலளிக்கின்றது. எனவே, தீமை மற்றும் வன்முறை நம்மை மூழ்கடித்துவிட்டதாகக் கருதும் சோதனையில் நாம் விழக்கூடாது. அதனால் உலகில் இருக்கும் பல நன்மைகளில் கவனம் செலுத்துவது மிக அவசியம். கடவுளது மீட்பின் பிரசன்னத்தின் தேவையில், மனித இதயத்தின் ஏக்கத்தை உள்ளடக்கிய காலத்தின் அடையாளங்கள், எதிர்நோக்கின் அடையாளங்களாக மாற்றப்பட வேண்டும்.

போரின் துயரத்தில் மூழ்கியிருக்கும் உலகிற்கு, எதிர்நோக்கின் முதல் அறிகுறி அமைதி என்று மொழிபெயர்க்கப்பட வேண்டும். போரினால் மனிதகுலம் ஒரு புதிய கடினமான சோதனைக்கு உட்பட்டுள்ளது, இது வன்முறையின் கொடூரத்தால் பல மக்களை ஒடுக்குகின்றது. அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்." (மத். 5:9) என்பதை யூபிலி நமக்கு நினைவூட்டுகிறது. அமைதிக்கான தேவை நம் அனைவருக்கும் சவாலாக உள்ளது. உறுதியான அமைதிக்கானத்  திட்டங்களைத் தொடர யூபிலி ஆண்டு  நமக்கு அழைப்பு விடுக்கிறது. நீடித்த அமைதியை இலக்காகக் கொண்ட பேச்சுவார்த்தைகளுக்கான துணிவும் படைப்பாற்றல் மிக்க அரசு நடவடிக்கைகள் கொண்வர்களாக வாழ யூபிலி ஆண்டு நம்மை அழைக்கின்றது

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 December 2024, 13:32