தேடுதல்

வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் புனிதக் கதவினை மூடியிருக்கும் சுவர் வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் புனிதக் கதவினை மூடியிருக்கும் சுவர் 

திருஅவையில் யூபிலி ஆண்டு 2025 – ஆணை மடல் பகுதி 9

ஆண்டவர் எனக்கு அருள் பொழிவு செய்துள்ளார்; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், சிறைப்பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும்,கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும் என்னை அனுப்பியுள்ளார்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

யூபிலி ஆண்டில், கடினமான சூழ்நிலையில் வாழும் பல சகோதர சகோதரிகளுக்கு எதிர்நோக்கின் உறுதியான அடையாளங்களாக இருக்க நாம் அழைக்கப்படுவோம். சிறை தண்டனை அனுபவிப்பவர்கள், அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெற எண்ணுபவர்கள், கட்டுப்பாடுகள், தடைகளைச் சந்திப்பவர்கள் போன்றோரின் வாழ்வில் நம்பிக்கையை வழங்குபவர்களாக நாம் இருக்க அழைக்கப்படுகின்றோம். மரியாதை மாண்பு போன்றவற்றை இழந்து துன்புறும் சிறைக்கைதிகளை நினைத்து பார்ப்போம். யூபிலி ஆண்டில் நம்பிக்கையை மீட்டெடுக்கும் முன்முயற்சிகளை அரசுகள் முன்னெடுக்க வேண்டும். மக்கள் தங்கள் மீதும் சமூகத்தின் மீதும் நம்பிக்கையை மீட்டெடுக்க உதவுவதை நோக்கமாகக் கொண்ட பொதுமன்னிப்பு, தண்டனைக்குறைப்பு, சிறைக்கைதிகள் சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைப்பதற்கான பாதைகள் போன்றவை உருவாக்கப்பட வேண்டும்.

இறைவார்த்தையிலிருந்து வந்த ஒரு பழங்கால அழைப்பாகிய இது, மக்கள் மீண்டும் வாழ தொடங்குவதற்கு உதவும் கருணை மற்றும் விடுதலைக்கான செயல்களுக்கு அழைப்பாகும். ஆண்டவர் எனக்கு அருள் பொழிவு செய்துள்ளார்;  ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும்,கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும் என்னை அனுப்பியுள்ளார். ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழங்கவும், நம் கடவுள் அநீதிக்குப் பழிவாங்கும் நாளை அறிவிக்கவும், துயருற்று அழுவோர்க்கு ஆறுதல் அளிக்கவும் என்னை அனுப்பியுள்ளா என்ற எசாயாவின் வாக்கு நிறைவேறும் ஆண்டு.  மரண தண்டனை என்பது கிறிஸ்தவ நம்பிக்கைக்கு முரணானது மன்னிப்பு மற்றும் புதுப்பித்தல் பற்றிய அனைத்து நம்பிக்கையையும் அழிக்கிறது. சிறைக்கைதிகளுக்கு ஆன்மிக நெருக்கத்தின் உறுதியான அடையாளத்தை வழங்குவதற்காக, சிறைச்சாலையில் ஒரு புனிதக் கதவு திறக்கப்படவேண்டும். எதிர்காலத்தை நம்பிக்கையுடனும், வாழ்க்கையை புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்புடனும் பார்க்க அழைக்கும் அடையாளமாக அப்புனிதக் கதவு இருக்கட்டும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 December 2024, 12:18