தேடுதல்

பிலிப்பீன்ஸ் கர்தினால்கள் பிலிப்பீன்ஸ் கர்தினால்கள்  

எதிர்நோக்கின் முகவர்களாக, மகிழ்ச்சியின் அறிவிப்பாளர்களாக....

மனிதகுலம் சந்திக்கும் போராட்டங்களில் பங்குகொள்ள கடவுள் எவ்வாறு மனித உரு எடுத்தார்

மெரினா ராஜ் - வத்திக்கான்

ஒற்றுமை மற்றும் அமைதிக்காக ஏங்கும் உலகில் கத்தோலிக்கர்கள் ஒளியைத் தாங்குபவர்களாக மாற வேண்டும் என்றும், எதிர்நோக்கின் முகவர்களாகவும் மகிழ்ச்சியின் அறிவிப்பாளர்களாகவும் கிறிஸ்தவ சமூகங்கள் இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள்ளார் மணிலா மறைமாவட்ட கர்தினால் Jose Advincula.

நம்மிடையே பிறந்த இயேசு, வாழ்க்கையின் துன்பங்களுக்கு மத்தியில் நம்பிக்கை மற்றும் வலிமையின் இறுதி ஆதாரமாக இருக்கிறார் என்பதை நினைவூட்டிய கர்தினால் ஜோஸ் அவர்கள், எதிர்நோக்கின் திருப்பயணிகளாக நமது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்குவோம் என்றும், போராட்டங்கள் நவீன வாழ்க்கையின் சிக்கல்கள் பல இருந்தாலும் இருளில் எதிர்நோக்கின் ஒளியாக இயேசு பிறந்தார் என்றும் எடுத்துரைத்தார்.

மனிதகுலம் சந்திக்கும் போராட்டங்களில் பங்குகொள்ள கடவுள் எவ்வாறு மனித உரு எடுத்தார் என்பதை விவரித்த கர்தினால் ஜோஸ் அவர்கள், எல்லாவற்றையும் படைத்த கடவுள், ஒரு சிறிய மாட்டுத் தொழுவத்தில் பிறக்கும் அளவிற்கு சிறியவராக தன்னைத் தாழ்த்தினார் என்றும் கூறினார்.

மனத்தாழ்ச்சி கொண்ட இயேசுவின் இந்த ஆழமான செயல், வாழ்வின் எல்லா சூழலிலும் கடவுள் நம்முடன் சேர்ந்து பயணிக்கிறார் என்பதை எடுத்துரைக்கின்றது என்றும், நம்பிக்கை மற்றும் துணிவுடன் தங்களது சொந்த துன்பங்களை எதிர்கொள்ள நம்பிக்கையுள்ள கிறிஸ்தவ மக்களுக்கு வலியுறுத்துகின்றது என்றும் கூறினார் கர்தினால் ஜோஸ்.

ஒருவருக்கொருவர் விருந்தோம்பல் செய்வதன் வழியாகக் கடவுளை வரவேற்க, நம் வீடுகளை மட்டுமல்ல, நம் இதயங்களையும் மனதையும் திறக்க கிறிஸ்துமஸ் நம்மை அழைக்கிறது என்று Kalookan கர்தினால் Pablo Virgilio David அவர்கள் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்

இனம், பாலினம், மதம் அல்லது சமூக-பொருளாதார நிலை ஆகியவற்றின் அடிப்படையில் பிரிவினையின் தடைகளை அகற்ற வேண்டும் என்றும், அத்தகைய தடைகளை உடைப்பதன் வழியாக மட்டுமே உண்மையான அமைதியை அடைய முடியும் என்றும் அடிக்கோடிட்டுக் காட்டினார் கர்தினால் டேவிட்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 December 2024, 12:23