தேடுதல்

மரண தண்டனைக்கு எதிரான மக்களின் போராட்டம் மரண தண்டனைக்கு எதிரான மக்களின் போராட்டம்  (ANSA)

மரண தண்டனையாளர்களின் தண்டனை குறைக்கப்பட வேண்டும்

மரண தண்டனையாளர்களின் தண்டனைக் குறைக்கப்படவும், மாற்றப்படவும் தொடர்ந்து செபிப்போம் - திருத்தந்தை பிரான்சிஸ்

மெரினா ராஜ் - வத்திக்கான்

மரண தண்டனையானது, மறுவாழ்வு மற்றும் சீர்திருத்தத்திற்கானவற்றைத் தடுக்கிறது என்றும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அதிகப்படியான வேதனையை ஏற்படுத்துகிறது எனவே மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் தண்டனைக் குறைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது அமெரிக்க ஆயர்கள் பேரவை.

திருஅவையால் மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது, ஏனெனில் அது தீண்டாமைத் தாக்குதல், மனித மாண்பின் மீதான தாக்குதல் என்பதை நற்செய்தியின் வெளிச்சத்தில் கற்பிக்கிறது என்றும், மரண தண்டனையை உலகளவில் ஒழிப்பதற்கான உறுதியுடன் திருஅவை செயல்படுகின்றது என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்தியுள்ள கருத்தையும் சுட்டிக் காட்டியுள்ளது அமெரிக்க ஆயர்கள் பேரவை.   

அமெரிக்க ஆயர்கள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் பதவிக்காலம் வருகின்ற 2025ஆம் ஆண்டு ஜனவரியுடன் முடிவிற்கு வரும் நிலையில் மரணதண்டனை மற்றும் சிறைத்தண்டனைகளை குறைக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது அமெரிக்க ஆயர்கள்  பேரவை.

"அமெரிக்காவில் மரண தண்டனையில் உள்ள கைதிகளுக்காக" அனைவரும் செபிப்போம், மரண தண்டனையாளர்களின் தண்டனைக் குறைக்கப்படவும், மாற்றப்படவும் தொடர்ந்து செபிப்போம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஞாயிறு மூவேளை செப உரையைத் தொடர்ந்த செப விண்ணப்பங்களின்போது எடுத்துரைத்ததையும் சுட்டிக்காட்டியுள்ளனர் ஆயர்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 December 2024, 15:40