2024-ஆம் ஆண்டில், 13 கத்தோலிக்க மறைப்பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கடந்த 2024 -ஆம் ஆண்டில், 13 கத்தோலிக்க மறைப்பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், இவர்களில் 8 பேர் அருள்பணியாளர்கள் மற்றும் 5 பேர் பொதுநிலையினர் அடங்குவர் என்றும் தெரிவித்துள்ளது வத்திக்கானின் ஃபீதேஸ் செய்தி நிறுவனம்.
இந்தப் படுகொலைகள் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்தன என்றும், இவற்றில் ஆப்பிரிக்காவில் ஆறு, மத்திய அல்லது தென் அமெரிக்காவில் ஐந்து மற்றும், ஐரோப்பாவில் இரண்டு என்றும் கூறும் அச்செய்தி நிறுவனம், இந்த மரணங்கள் பெரும்பாலும் கொள்ளையர்களால் விளைவிக்கப்பட்டவை என்றும், சிலர் தலத்திருஅவைத் தொடர்பான நடவடிக்கைகளால் குறிவைக்கப்பட்டவர்கள் என்றும் உரைக்கிறது.
ஆசியாவில் எந்த உயிரிழப்பும் இல்லை என்றும், கொல்லப்பட்டவர்களில், ஹொண்டுராஸின் கத்தோலிக்க மனித உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜுவான் அந்தோணியோ லோபஸ் அவர்களும் ஒருவர் என்று குறிப்பிடும் இச்செய்தி நிறுவனம், இவர் மாசுபடுத்தும் சுரங்கத்தை மூடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஒரு தாக்குதலால் கொல்லப்பட்டார் என்றும், அவரது மரணம் ஹோண்டுராஸின் செயற்பாட்டாளர்களுக்கு எதிரான அடக்குமுறையின் பரந்த போக்கின் ஒரு பகுதியாகும் என்றும் சுட்டிக்காட்டுகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்