தேடுதல்

எசாயா இறைவாக்கினர் முன் தூதர் எசாயா இறைவாக்கினர் முன் தூதர் 

தடம் தந்த தகைமை - எசாயா எசேக்கியாவுக்கு விடுத்த செய்தி

இஸ்ரயேலின் புனிதமானவரை அன்றோ! நீ உன் தூதர்மூலம் என் தலைவரைப் பழித்துரைத்து, ‘எண்ணற்ற என் தேர்களோடு நான் மலையுச்சிகளுக்கு லெபனோனின் சிகரங்களுக்குஏறிச் சென்றேன். வானளாவிய கேதுரு மரங்களையும் அங்கு நின்ற உயர்ந்த தேவதாரு மரங்களையும் வெட்டினேன்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

ஆமோட்சின் மகன் எசாயா எசேக்கியாவிடம் ஆளனுப்பிச் சொன்னது:“ இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் .கூறுவது இதுவே: அசீரிய மன்னன் சனகெரிபைப் பற்றிய உன் வேண்டுதலைக் கேட்டேன். அவனக்கு எதிராக ஆண்டவர் கூறிய வார்த்தை இதுவே: கன்னிமகள் சீயோன் உன்னை இகழ்கிறாள்; உன்னைப் பார்த்து நகைக்கிறாள்; மகள் எருசலேம் பின் நின்று தலையசைக்கிறாள். யாரை நீ பழித்து இகழ்ந்தாய்? யாருக்கு எதிராய்க் குரல் எழுப்பினாய்? யாரை நீ இறுமாப்புடன் நோக்கினாய்?

இஸ்ரயேலின் புனிதமானவரை அன்றோ! நீ உன் தூதர்மூலம் என் தலைவரைப் பழித்துரைத்து, ‘எண்ணற்ற என் தேர்களோடு நான் மலையுச்சிகளுக்கு லெபனோனின் சிகரங்களுக்கு ஏறிச் சென்றேன். வானளாவிய கேதுரு மரங்களையும் அங்கு நின்ற உயர்ந்த தேவதாரு மரங்களையும் வெட்டினேன். அதன் காடுகளின் மிக அடர்ந்த பகுதியான கடையெல்லைவரை சென்றேன். நான் அயல்நாடுகளில் கிணறு வெட்டி நீர் பருகினேன். எகிப்தின் நதிகளையெல்லாம் என் உள்ளங்கால்களினால் வற்றச் செய்தேன்’ என்றாய்! நீ கேட்டதில்லையோ? நான் தான் பலநாள்களுக்கு முன்பே இதை முடிவுசெய்தேன். நான் தான் தொன்றுதொட்டே இதைத் திட்டமிட்டேன். என்று கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 January 2025, 13:36