தடம் தந்த தகைமை : யூதர்கள் மீண்டும் பெற்ற புதுவாழ்வு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
சீவான் என்ற மூன்றாம் மாதத்தில், இருபத்து மூன்றாம் நாளன்று மன்னரின் எழுத்தர்கள் வரவழைக்கப்பட்டனர். மொர்தக்காய் இட்ட ஆணையின்படியே யூதர் அனைவருக்கும் இந்தியா தொடங்கி எத்தியோப்பியா வரையிலுள்ள நூற்றிருபத்தேழு மாநிலங்களின் குறுநில மன்னர்களுக்கும், மாநிலங்களின் ஆளுநர் அனைவர்க்கும் மாநிலத் தலைவர் அனைவர்க்கும் அவர்தம் மக்களின் வரிவடிவ வாரியாகவும், மொழி வாரியாகவும் மடல்கள் வரையப் பெற்றன. மன்னர் அகஸ்வேர் பெயரால் எழுதப் பெற்று, அரச கணையாழி முத்திரையிடப்பெற்ற இம்மடல்கள், அரசக் கொட்டிலைச் சார்ந்த அரசப் பணிக்குரிய புரவிகள் மீது அமர்ந்தேகும் விரைவு அஞ்சலர் மூலம் அனுப்பப்பட்டன.
ஒவ்வொரு நகரிலும் உள்ள யூதர் ஒன்றுதிரண்டு தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும், அவர்களையும் அவர்களின் குழந்தைகள், பெண்கள் ஆகியோரையும் தாக்கக்கூடிய எந்த நாட்டையும் மாநிலத்தையும் சார்ந்த படைகளை அழித்துக் கொன்று ஒழிக்கவும், அவற்றின் உடைமைகளைக் கொள்ளையிடவும் தேவையான அதிகாரத்தை மன்னரின் பெயரால் எழுதப்பட்ட இம்மடல்கள் அளித்தன. மன்னர் அகஸ்வேரின் மாநிலங்கள் அனைத்திலும், அதார் என்ற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாம் நாளன்று, ஒரே நாளில் இவ்வாறு செய்வதென அறிவிக்கப்பட்டது. அம்மடலின் நகல் ஒவ்வொரு மாநிலத்தின் அனைத்து மக்களுக்கும் சட்டமாக அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு நகரிலும், எங்கெல்லாம் மன்னரின் இந்த வாக்கும் நியமமும் எட்டினவோ, அங்கெல்லாம் வாழ்ந்த யூதர் மகிழ்ந்து களிகூர்ந்தனர். அந்நாள் விருந்தாடும் விழா நாளாக விளங்கியது
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்