தேடுதல்

நம்வாழ்வு முதன்மை ஆசிரியர் அருள்முனைவர் இராஜசேகரன் நம்வாழ்வு முதன்மை ஆசிரியர் அருள்முனைவர் இராஜசேகரன் 

நேர்காணல் – நம்வாழ்வு இதழின் எதிர்நோக்கின் திருப்பயணம் - பகுதி 2

தமிழர் வாழ்வியல் பெருமைகள், நற்செய்தி தரும் தேடல்கள், உலகை ஆளும் ஊடகம், Transfiguring Love, The Journey of True Love, Praying with Saints, and Seeds of the Sower போன்ற நூல்கள் அருள்முனைவர் இராஜசேகரன் அவர்களின் குறிப்பிடத்தக்கப் படைப்புகள். இவரின் முந்தைய படைப்பான ‘திருக்குடும்பத் திருக்காவியம்’ என்னும் திருக்குடும்பம் பற்றிய புதுக்கவிதை நூல் திரு அவையின் மரபை ஒட்டி, இலக்கிய உலகில் காவிய வரிசையில் இடம் பெற்றது தனிச்சிறப்பு.
நேர்காணல் - அருள்முனைவர் இராஜ சேகரன்

மெரினா ராஜ் – வத்திக்கான்

அன்புநேயர்களே கடந்த வாரம் தமிழகத்தின் மிகச்சிறப்பான கத்தோலிக்க வார இதழான நம்வாழ்வு இதழின் ஆசிரியர் அருள்முனைவர் இராஜ சேகரன் அவர்கள், எதிர்நோக்கின் திருப்பயணிகள் என்ற யூபிலி ஆண்டு 2025 பற்றியக் கருத்துக்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார். இன்றைய நம் நேர்காணலில் அதன் தொடர்ச்சியும் நிறைவுப்பகுதியுமாகிய அவரின் கருத்துக்கள் குறித்து நாம் காண்போம்.

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள லொயோலா மேரி மவுண்ட் பல்கலைக் கழகத்தில் தொகுப்பு இறையியலில் (Systematic Theology) முதுகலைப் பட்டமும் UCLA – University of California Los Angeles – இல் இதழியலில் (Proficiency in Journalism) தனிப்புலமைக்கான இணை முதுகலைப் பட்டமும், மற்றும் சிகாகோ கத்தோலிக்கப் பல்கலைக் கழகத்தில் ஊடக நற்செய்தி அறிவிப்புப் பணியில் முனைவர் பட்டமும் பெற்றவர். டிஜிட்டல் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக, இன்றைய ஊடகத் தலைமுறையினரான இளையோருக்கு நற்செய்தி அறிவிப்பது பற்றிய, தமிழ் நாடு திரு அவையில் களஆய்வும், நேர்த்தியான முன்னெடுப்புகளுக்கான பரிந்துரைகளும் கொண்டதாக இவருடைய முனைவர் பட்ட ஆய்வு அமைந்திருந்தது. தமிழர் வாழ்வியல் பெருமைகள், நற்செய்தி தரும் தேடல்கள், உலகை ஆளும் ஊடகம், Transfiguring Love, The Journey of True Love, Praying with Saints, and Seeds of the Sower போன்ற நூல்கள் இவருடைய குறிப்பிடத்தக்கப் படைப்புகள். இவரின் முந்தைய படைப்பான ‘திருக்குடும்பத் திருக்காவியம்’ என்னும் திருக்குடும்பம் பற்றிய புதுக்கவிதை நூல் திரு அவையின் மரபை ஒட்டி, இலக்கிய உலகில் காவிய வரிசையில் இடம் பெற்றது தனிச்சிறப்பு. தற்போது இவர், தமிழ்நாடு கத்தோலிக்க ஆயர் பேரவையின் அச்சு ஊடகப் பணியின் இயக்குநராகவும், தமிழ்நாடு திருஅவையின் தனிப்பெரும் வார இதழான ‘நம் வாழ்வு’ இதழின் முதன்மை ஆசிரியராகவும், மற்றும் வெளியீட்டாளராகவும் பணியாற்றுகிறார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 January 2025, 08:36