ஜாம்பியாவின் கடன்களை மறுசீரமைப்புச் செய்ய உதவிய திருஅவை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
ஜாம்பியா நாட்டின் வெளிநாட்டுக்கடன்களை மறுசீரமைப்புச் செய்ததில் கத்தோலிக்க திருஅவையின் முயற்சிகளுக்கு தன் நன்றியை வெளியிட்டுள்ளார் அந்நாட்டு அரசுத்தலைவர் Hakainde Hichilema.
ஜாம்பியா நாட்டிற்கான திருப்பீடத்தூதுவர், பேராயர் Gianluca Perici அவர்களை அரசுத்தலைவர் மாளிகையில் சந்தித்தபோது இந்த நன்றியை வெளியிட்ட அரசுத்தலைவர், ஜாம்பியா நாட்டின் கடன் நிவாரண முயற்சிகளுக்கும், பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்கும் கத்தோலிக்க திருஅவை அனைத்துலக அளவில் ஆற்றிவரும் முயற்சிகளுக்கு தன் பாராட்டுக்களையும் வெளியிட்டார்.
வெளிநாட்டுக் கடன்களை திரும்ப அளிப்பதில் ஏற்பட்டுள்ள நல்மாற்றங்களின் பலன்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கென செலவழிக்கப்படும் என்ற அரசுத்தலைவர், இதற்கு முக்கியப் பங்களித்தது கத்தோலிக்க திருஅவையே எனவும் கூறினார்.
கல்வித்துறை, நலத்துறை மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டங்களில் ஜாம்பிய திருஅவை ஆற்றிவரும் பணிகளோடு அரசு தன் நெருங்கிய ஒத்துழைப்பை வழங்கிவருகிறது என்ற அரசுத்தலைவர் Hichilema, குடிமக்களின் நலனுக்காக மத அமைப்புக்களுடன் தன் அரசு இணைந்து செயல்பட்டுவருகிறது என மேலும் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்