தடம் தந்த தகைமை - எச்சரிக்கையாக இருங்கள்.
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
என்னை நீங்கள் சார்ந்திருப்பதால் எவ்வளவோ துயர்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும். ஆகவே அது குறித்து எச்சரிக்கையாக இருங்கள் (மத் 10:17) என முன்மொழிந்தார் இயேசு.
யூதர்களின் செபக்கூடங்களையொட்டியே நீதிமன்றங்கள் செயல்பட்டன. இந்நீதிமன்றம் 23 செல்வாக்கு பெற்ற உறுப்பினர்களைக் கொண்டது. சமய ஒழுங்குகளை மீறுவோர், மறைநூலைத் திரித்துக் கூறுவோா, ஆள்வோருக்கு எதிராகச் செயல்படுவோர், போராட்ட
உணர்வோடு புரட்சி ஏற்படுத்த முனைவோர் ஆகியோரை இங்கே விசாரித்துத் தண்டனையாகக் கசையடி வழங்கும் வழக்கம் இருந்தது.
பெருங்குற்றம் புரிந்தவர்களைத் தலைமைச் சங்கத்திற்கு அனுப்புவர். அங்கே ஆள் பிடித்தால் தப்பலாம். இல்லையெனில் வாழ்வு கேள்விதான். இயேசுவின் போதனைகள் மரபுகளுக்கு அப்பாற்பட்டிருந்தன. அதனைச் சட்ட மீறலாகப் புனைந்தனர் மறைநூல் அறிஞர்கள். அவை சமூகத்தில் கலகம் விளைவிப்பதாகக் கருதினர். எனவே இயேசுவையும் அவரைச் சார்ந்தவர்களையும் எப்படியேனும் பிடித்து விசாரித்துத் தண்டிக்க வேண்டும் என எதிர்பார்த்து இருந்தனர். அவர்களது சூழ்ச்சியை உணர்ந்த இயேசு தம் சீடர்களுக்குச் சொல்லும் நம்பிக்கைக் கனலே இவ்வார்த்தை. அன்று மட்டுமல்ல, இன்றும் நாம் நன்மையில் நிலைத்தால் நம்பிக்கையில் நிலைகுலைய வேண்டியதில்லை. ஏனெனில் அவர் நம்மோடு. ஆழமான அன்பு அஞ்சாது.
இறைவா! நன்மை செய்து அவமானப்பட்டாலும், தண்டிக்கப்பட்டாலும் நன்மையிலே நிலைக்கும் உறுதியைத் தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்