நைஜீரியா கோவில் ஒன்று நைஜீரியா கோவில் ஒன்று  (AFP or licensors)

நைஜீரியாவில் 10 ஆண்டுகளில் 145 அருள்பணியாளர்கள் கடத்தல்

நைஜீரியாவில் 2015ஆம் ஆண்டிலிருந்து 2025ஆம் ஆண்டு வரையில் 145 அருள்பணியாளர்கள் கடத்தப்பட்டுள்ளனர், இதில் 11 பேர் கொல்லப்பட்டனர், 4 பேர் குறித்த எவ்விரமும் தெரியவில்லை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

கடந்த 10 ஆண்டுகளில் நைஜீரியாவில் 145 அருள்பணியாளர்கள் கடத்தப்பட்டதாகவும், அதில் 11 பேர் கொல்லப்பட்டதாகவும் அண்மையில் அந்நாட்டில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கைத் தெரிவிக்கின்றது.

நைஜீரியா நாட்டின் கத்தோலிக்க செயலகம் அண்மையில் மேற்கொண்ட ஆய்வுகளின்படி, 2015ஆம் ஆண்டிலிருந்து 2025ஆம் ஆண்டு வரையுள்ள காலக்கட்டத்தில் 145 அருள்பணியாளர்கள் கடத்தப்பட்டதாகவும், இதில் 11 பேர் கொல்லப்பட்டதாகவும், 4 பேர் குறித்த எவ்விரமும் தெரியவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.

11 பேர் கொல்லப்பட்டது, 4 பேரின் உண்மை நிலை குறித்து எதுவும் தெரியவில்லை எனக் கூறும் இவ்வறிக்கை, ஏனையோர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறது.

நைஜீரியாவில் அருள்பணியாளர்கள் கடத்தப்படுவது மிகவும் பரவலாகக் காணப்படுவதாகவும், பெரும்பாலான கடத்தல்கள் பிணையத் தொகைக்காக நடத்தப்படும் வேளையில், நாட்டின் வடமாநிலங்களில் அருள்பணியாளர்களைக் கொலைச் செய்யும் போக்கும் நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நைஜீரியாவின் Lagos மாநிலத்திலேயே சட்டம் ஒழுங்கு நன்முறையில் பராமரிக்கப்படுவதால் அங்கு மட்டுமே அருள்பணியாளர்கள் பாதுகாப்பை உணர்வதாகவும் இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 மார்ச் 2025, 13:27