தேடுதல்

அன்னை தெரேசாவை நோக்கி செபித்த திருத்தந்தை அன்னை தெரேசாவை நோக்கி செபித்த திருத்தந்தை 

அன்னை தெரேசாவை நோக்கி திருத்தந்தை செபம்

ஏழைகளுக்கு உதவிகளை ஆற்ற, அன்னை தெரேசா அவர்களால் முடிந்தது, ஏனெனில், ஒவ்வொருவர் முகத்திலும், அவர், இயேசுவைக் கண்டார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

இரக்கம் மற்றும் அனைத்து நன்மைத்தனங்களின் தந்தையாம் இறைவா, புனித அன்னை தெரேசாவின் வாழ்வையும் தனிவரத்தையும் எமக்கு அளித்தமைக்கு உமக்கு நன்றி கூறுகிறோம். எல்லைகளற்ற உமது இறைபராமரிப்பில், நீர், இந்தியா, மற்றும், உலகம் முழுவதும் உள்ள, ஏழைகளிலும் பரம ஏழைகளிடையே உமது அன்பின் சாட்சியாக செயல்பட அழைத்தீர். அதிக உதவித் தேவைப்படும் நிலையிலிருந்த மக்களுக்கு, உதவிகளை ஆற்ற அவரால் முடிந்தது, ஏனெனில் ஒவ்வொருவர் முகத்திலும் அவர் உமது மகன் இயேசுவைக் கண்டார். ஏழைகள், மற்றும், நீதியின்பால் தாகம் கொண்டோரின் செபத்துடன் கூடிய கூக்குரலாக, அன்னை தெரேசா இருந்தார். ஏழைகளின் அன்னையாம் அன்னை தெரேசாவே, உம்முடைய பரிந்துரையையும் உதவிகளையும் வேண்டுகிறோம். இங்குதான், நீர், கிறிஸ்தவ வாழ்வை, திருமுழுக்கின் வழி துவக்கினீர், இங்குதான், உம் கிறிஸ்தவத் தூண்டுதல், ஒரு குடும்பத்தில் துவங்கியது, இங்குதான் நீர், உதவித் தேவைப்படும் மக்களை, நேரடியாக கண்டீர். உதவியிலிருப்போரை அன்புகூர, இங்குதான், உம் குடும்பத்திலிருந்து கற்றுக்கொண்டீர். இங்குதான், தேவன் அழைப்பதை உணர்ந்தீர். ஏழைகள், உரிமை இழந்தோர், நோயுற்றோர், ஒதுக்கப்பட்டோர் ஆகியோரின் குரல்களுக்கு நாங்களும் உம்மைப்போல் செவிமடுக்க உதவுமாறு, இறைவனிடம் உம் பரிந்துரையை வேண்டுகிறோம். தங்கள் தேவையில், எம்மை நோக்கி பார்ப்பவரில், இறைவனைக் கண்டிட, எமக்கு உதவியருளும். துன்புறுவோரின் முகங்களில், இறைவனை அடையாளம் கண்டிடும் இதயத்தை, இறைவன் நமக்கு வழங்குவாராக. ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கவும், சிறைக்கைதிகளுக்கு விடுதலை வழங்கவும், துன்புறுவோருக்கு மகிழ்வை வழங்கவும், அனைவருக்கும் மீட்பின் அருளைத் தரவும் உதவும் வகையில், நம் செயல்பாடுகள் அமைய, இறைவன் உதவுவாராக. புனித அன்னை தெரேசாவே, இந்த நகருக்காகவும், இந்த மக்களுக்காகவும், திருஅவைக்காகவும் செபித்தருளும். மேலும், நீதி, அன்பு, இரக்கம், அமைதி மற்றும் சேவையில் ஈடுபட்டு, கிறிஸ்துவைப் பின்பற்றும் அனைவருக்காகவும் செபித்தருளும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 May 2019, 16:07