இந்தியாவின் Port Blair மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
இந்தியாவின் அந்தமான், நிக்கோபார் தீவுக்கூட்டத்தின் தலைநகரான Port Blair மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, அதே மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்பணி விசுவாசம் செல்வராஜ் அவர்களை, ஜுன் 29, செவ்வாய்க்கிழமையன்று நியமித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
1966ம் ஆண்டு ஜனவரி மாதம் 4ம் தேதி சென்னை, அண்ணாமலைபுரத்தில் பிறந்த அருள்பணி விசுவாசம் செல்வராஜ் அவர்கள், சென்னை சாந்தோம் இளங்குருமடத்திலும், சென்னை திரு இருதயக் குருத்துவக் கல்லூரியிலும் பயின்றபின், இராஞ்சி புனித ஆல்பர்ட் அருள்பணித்துவ பயிற்சிக் கல்லூரியிலும் படித்து, 1994ம் ஆண்டு, Port Blair மறைமாவட்டத்திற்கு அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டார்.
மறைமாவட்ட நிர்வாகப்பணிகளில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள அருள்பணி விசுவாசம் செல்வராஜ் அவர்கள், 2020ம் ஆண்டு முதல் Port Blair மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகியாக இருந்து வருகிறார்.
முன்னாள் ஆயர் Aleixo das Neves Dias அவர்கள், 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 6ம் தேதி பணி ஒய்வு பெற்றதைத் தொடர்ந்து, Port Blair மறைமாவட்டம் ஆயரின்றி இருந்து வந்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்